30 ஆண்டுக்கு பிறகு கும்பத்தில் சனிபெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்

Shani Rashi Parivartan 2023: சனி பகவானின் அருளைப் பெறவும், ஏழரை சனி தவிர்க்கவும் மக்கள் பல்வேறு பரிகாரங்களை மேற்கொள்கின்றனர். அதன்படி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார். 

Saturn Transit in Kumbh Rashi 2023: ஜோதிடத்தில், சனி பகவானை நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு நபர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப, சனி பலனைத் தருகிறார். அதன்படி 30 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி தனது ராசியான கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். ஜனவரி 17, 2023 அன்று, சனி தேவன் கும்ப ராசிக்குள் நுழைந்தார். இனி 2025 வரை இந்த ராசியில் இருப்பார். சனிபகவானின் இந்த ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு பண வரவு, ப்ரமோஷன் கிடைக்கும். இந்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /4

சனிப் பெயர்ச்சி 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். எனவே, அடுத்த 2 ஆண்டு வரை மூன்று ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் செழிப்பு பெறப்போகின்றனர்.    

2 /4

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் மற்றும் வேலை செய்பவர்களும் வெற்றி பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும், கலை, இசை மற்றும் ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் சிறந்த பலன்களைப் பெறுவார்கள்.  

3 /4

மிதுன ராசி: 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு அற்புதமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை செய்பவர்களின் சம்பள உயர்வுடன், பதவி உயர்வும் பெறலாம். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களுக்கும் வாய்ப்பு உண்டு.  

4 /4

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் இருநந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.