இந்த ஸ்னாக்ஸ்களை சாப்பிட வேண்டாம்! மூளைக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்!

மனித உறுப்புகளில் மூளை மிகவும் அவசியமான ஒன்று. எனவே அதற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /6

உருளைக்கிழங்கு சிப்ஸ் உருளைக்கிழங்கு உணவுகளில் பயன்படுத்தப்பட்டாலும் சிப்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. இவற்றில் அதிக கொழுப்புகள் உள்ளது. இவை மூளையில் வீக்கத்தை ஏற்படுத்த கூடும்.   

2 /6

தானியங்கள் தானியங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,  தொடர்ந்து இவற்றை சாப்பிடுவது அறிவாற்றலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

3 /6

வறுத்த உணவு பக்கோடா, கோழி, பொரியல்கள், சமோசா போன்ற வறுத்த உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இவை மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.  

4 /6

ஜூஸ் கடைகளில் விற்கப்படும் ஜூஸ் அதிகம் சாப்பிட கூடாது. இவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்படும். எனவே மூளையின் சில செயல்பாடுகளை பாதிக்கும்.  

5 /6

மது ஆல்கஹால் அதிகமாக குடிக்கும் போது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கலாம். மேலும் நரம்பு சம்பத்தப்பட்ட நோய்களை ஏற்படுத்த கூடும். இது வைட்டமின் பி1 குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.  

6 /6

கேக் கேக்குகளில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவை உடல் மற்றும் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.