Annual Pilgrimage Of Virgin of Guadalupe: குவாடலூப்பே மாதாவின் பிரதான ஆலயம் வட அமெரிக்காவின் மெக்சிக்கோ நாட்டில் இருக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் யாத்திரைத் தலமான இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் மிக அதிக அளவில் மக்கள் கூடுவார்கள்.
குவாடலூப் புனித அன்னை ஆலயத்தின் வருடாந்திர விழாவில் கலந்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து மக்கள் வந்து குவிந்துள்ளனர்.
(Photos Courtesy: AFP Twitter)
மெக்ஸிகோவில் குவாடலூப் அன்னையின் வருடாந்திர யாத்திரையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் பதினொரு மில்லியன் யாத்ரீகர்கள் கலந்துக் கொண்டனர்
கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பக்தர்கள் குவாடலூப் பசிலிக்காவிற்கு சென்றுள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 இல் பாரம்பரிய டிசம்பர் 12 யாத்திரை இடைநிறுத்தப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் 2021 இல் மீண்டும் தொடங்கப்பட்டது யாத்திரை
திங்கட்கிழமை அதிகாலையில், மெக்ஸிகோ மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வந்த யாத்ரீகர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்