முன் வழுக்கையால் வருத்தமா..இதை மட்டும் பண்ணுங்க உங்கள் முடி பிச்சிக்கிட்டு வளரும்!

முன் வழுக்கை விழ பொதுவான காரணம் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா. இவை முன் வழுக்கை விழவும் மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு மரபணு ரீதியாக இதுபோன்ற பிரச்சனை வரும் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு வளர்ச்சியில் வழுக்கையாக இருப்பார்கள் மற்றும் வேறொரு சிலர் சில காரணங்களால் அவர்களுக்கு முன் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இதில் நன்றாக இருந்து பின்னர் முன் வழுக்கை விழும் ஆட்களுக்கு இந்த விஷயங்கள் உபயோகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் நவீனக் காலத்தில் இருப்பதால் பலருக்கும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாகவும் முன் வழுக்கை விழலாம்.

1 /8

உச்சந்தலையில் நன்றாக உங்கள் இரு கைகளால் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது உச்சந்தலையில் முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என மருத்துவ ஆய்வு கூறுகின்றது.

2 /8

கொலாஜன் உள்ள பொருட்கள் பயன்படுத்துவதால் உங்கள் முடி வலுவடையும். மேலும் அதற்குப் பலமடங்கு முடி வளர்ச்சியைத் தூண்டும் எனக் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு சீரம்களில் கொலாஜன் நிறைந்துள்ளன. இது முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.  

3 /8

உணவு:கீரைகள், காய்கறிகள் மற்றும் பருப்புகள் போன்றவற்றில் இரும்புச்சத்து காணப்படுகிறது. இது உங்கள் முடியை வலுவாக்கி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை உருவாக்கச் செய்யும்.  

4 /8

மன அழுத்தம்: முன் வழுக்கை முதல் முடி உதிர்தல் வரை சரியான முறையில் பாதுகாத்துக்கொள்ளும் பக்குவம் உங்களிடம் உள்ளது. உணவு மற்றும் சீரம் போன்றவற்றைச் சரியாகக் கடைப்பிடித்தும் முடி வளரவில்லை, கொட்டுகிறது என்றால் உங்கள் மன அழுத்தம் காரணம் என்றே மருத்துவ ஆய்வு கூறுகிறது.  

5 /8

முடி பராமரிப்பு பொருட்கள்: அதிகம் இரசாயனம் கலந்த பொருட்களை முடிக்குப் பயன்படுத்தி வந்தால் நிச்சயம் முடி உதிர்தல் ஏற்படும். முடிந்த அளவுக்கு இரசாயனம் குறைவான பொருட்களை முடிக்குப் பயன்படுத்துங்கள்.

6 /8

ரோஸ்மேரி எண்ணெய்;முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த எண்ணெய் ரோஸ்மேரி. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. படுக்கைக்கு முன் இந்த எண்ணெய் உச்சந்தலையில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்யவும். இதுபோன்று தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் முடி  வளர்ச்சியை இரண்டு மாதத்தில் காணலாம்.  

7 /8

ஜெரனியம் எண்ணெய்:இரண்டு தேக்கரண்டி அவக்கேடோ எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் இரண்டும் 8 முதல் 10 துளிகள் நன்றாகக் கலந்து மற்றும் இதனுடன் வைட்டமின் ஈ சேர்க்கவும். இது உங்கள் உச்சந்தலையில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.