ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குணதிசயங்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மிகவும் அலட்சிய போக்கு கொண்ட சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சிலர் மிகவும் கவனக்குறைவாக இருப்பதை காணலாம். தங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிப்பதில்லை அல்லது எந்த வேலையையும் பொறுப்புடன் சரியாகச் செய்ய முடிவதில்லை. தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை வரை, பல்வேறு வகையில் குழப்பங்கள் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் 5 ராசிக்காரர்களுக்கு கவனக்குறைவு அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால் பலமுறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தன் இஷ்டப்பட்டி செயல்படுவார்கள். பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் வேலை செய்வார்கள், சில சமயங்களில் இதனால் அவர்கள் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். இருப்பினும், இவர்கள் மற்றவர்களுடன் காட்டும் மகிழ்ச்சியான மற்றும் நட்பான தன்மையினால், அனைவராலும் விரும்பப்படுகிறார்கள்.
சிம்மம்: ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களும் கவனக்குறைவாகவே இருப்பார்கள். கடின உழைப்பின் மூலம், அவர்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேறி நல்ல தலைவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் விஷயங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அல்லது உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று வரும்போது, அவர்கள் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறார்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கவனக்குறைவாக இருப்பதோடு சில சமயங்களில் இதனால் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அவர்களின் அறையில் சீரற்ற முறையில் பொருட்கள் பரவி இருப்பதைக் பார்ப்பது இயல்பானது. இருப்பினும், அவர்களுக்கு நல்ல பெயரையும் அங்கீகாரத்தையும் தரும் பல குணங்கள் உள்ளன.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் சோம்பேறிகளாக இருப்பதோடு, ஒவ்வொரு வேலையையும் உடனே செய்யாமல் தள்ளிப் போடுவார்கள். இவர்களின் இந்த பழக்கம் அவர்களை சிக்கலில் ஆழ்த்துவதுடன் இமேஜையும் கெடுத்து விடுகிறது.
மீனம்: மீன ராசிக்காரர்கள் எதையும் சிறப்பாகச் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். மேலும் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், அவர்களால் சரியான நேரத்தில் வேலை செய்ய முடியாமல்,போவதாஅல், பல சமயங்களில் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )