Astro Traits: எச்சரிக்கை! பொய் சொல்லுவதில் வல்லவர்கள் ‘இந்த’ ராசிக்காரர்கள்!

பொய் சொல்பவர்கள் ராசி: பொதுவாக நம்மில் பலர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பெரிய அல்லது சிறிய பொய்களை சொல்ல நேரிடலாம். ஆனால் அதன் நோக்கம் யாரையும் காயப்படுத்துவதோ அல்லது பாழ்படுத்துவதாகவோ இருக்காது. ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லும் பழக்கம் சில ராசிக்காரர்களுக்கு உண்டு. மக்கள் அவர்களுடைய பேச்சுக் கலையை எளிதில் நம்பி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

1 /4

மிதுன ராசிக்காரர்கள் காரணம் இல்லாமல் பொய் சொல்லும் பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள். இதுமட்டுமின்றி, எந்த ஒரு நபரும் தங்கள் பேச்சை எளிதில் நம்பும் வகையில், தங்கள் வார்த்தைகளை திரித்து முன்வைக்கிறார்கள். எதிரில் இருப்பவர் அவர்களின் பொய்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பேசும்  கலை இவர்களிடம் உள்ளது.

2 /4

சிம்ம ராசிக்காரர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கொஞ்சம் பொய் சொல்லவும் தயங்குவதில்லை. மக்களின் கவனம் அவர்கள் மீது இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் பொய் சொல்கிறார்கள். இருப்பினும், இவர்கள் பொய் சொல்வதில் அவ்வளவு நிபுணர்கள் அல்ல. சில சமயம் அவர்களின் பொய்களும் அம்பலமாகி பிடிபடுவார்கள்.

3 /4

துலாம் ராசிக்காரர்கள் தாராள குணம் கொண்டவர்கள். தனது வார்த்தைகளால் யாரேனும் மனம் புண்படப் போகிறார்களானால், இவர்கள் பொய் சொல்லத் தயங்குவதில்லை. யாருடைய மனதையும் புண்படுத்த விரும்ப மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், யாராவது வருத்தப்பட்டால், இவர்கள் அவரது மனது பாதிக்காமல் இருக்க பொய் சொல்லி காப்பாற்றுகிறார்கள். மொத்தத்தில், இந்த மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக அல்ல, மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க பொய் சொல்கிறார்கள்.  

4 /4

விருச்சிக ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள். அதுமட்டுமல்லாமல், இவர்களது பொய்களை யாரும் சந்தேகிக்க முடியாத அளவிற்கு பொய் சொல்லும் கலையும் இருக்கும். அவர்கள் தங்கள் பொய்களுக்காக பல வகையான கதைகளை உருவாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி எதிரில் இருப்பவர் இவரது வார்த்தைகளால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். பொய்யை உண்மையாகக் காட்டும் கலை இவர்களிடம் அபாரமானது.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)  

Next Gallery