உணர்ச்சிவசப்படுவது மனித இயல்பு. மற்றவரின் துன்பத்தை கண்டு மகிழாமல், அவர்கள் உணர்வை புரிந்து கொள்ள இந்த குணம் இருப்பது மிகவும் முக்கியம். ஜோதிடத்தில், சில ராசி அறிகுறிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படுவதால், காரியத்தை கொடுத்துக் கொள்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் ஆபத்தானது. எனவே, கீழே குறிப்பிட்டுள்ள இந்த ராசிக்காரர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம் ராசிக்காரர்கள் புத்திசாலிகள் என்றாலும், எளிதில் உணர்ச்சிவசப்படுவதால், சில சமயங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். மனம் திறந்து பழகும் இவர்களுக்கு சில சமயங்களில் நியாயமான பதில் கிடைக்காதபோது விரக்தியடைகிறார்கள். அதைப் பற்றியே சிந்தித்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்களால் பொய், பாசாங்கு, ஏமாற்றுதல் போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் மனம் திறந்து மக்களுடன் பழகுகிறார்கள். ஆனால் அவர்கள் எளிதல் ஏமாற்றப்பட்டு மனதளவில் காயமடைகின்றனர்.
மீன ராசிக்காரர்களும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இந்த பொய்யையும் வஞ்சகத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, யாராவது ஏமாற்றினால், அதையே நினைத்து விரக்தியில் மூழ்கி, அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் தனமை கொண்டட்வர்களாக இருக்கிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். மற்றவர்களை நேசிப்பதிலும், அக்கறை கொள்வதிலும் அவர்களுக்கு ஈடு இணை இல்லை. அதுமட்டுமின்றி பிறர் வலியை நினைத்து அவர்கள் கண்ணீர் விடுவது சகஜம். இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் சரி எது, தவறு எது என வேறுபடுத்த முடியாமல் சுயநலவாதிகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அவர்களை யார் வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்றலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)