இம்ரான் கான் போன்று தாக்குதலுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர்கள் - ஓர் பார்வை!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். இதேபோல், கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த தொகுப்பு

  • Nov 04, 2022, 16:18 PM IST

 

 

1 /4

இளம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மொண்ட்லி குமாலோ கடந்த ஜூன் 29 அன்று இங்கிலாந்தில் உள்ள சோமர்செட்டில் உள்ள பப் ஒன்றிற்கு வெளியே தாக்குதலுக்கு உள்ளானர். அவர் குணமடைவதற்கு முன் 6 நாள்கள் சுய நினைவின்றி இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்காக 2020ஆம் ஆண்டில் U19 உலகக் கோப்பையை விளையாடிய குமாலோ, பிரிட்ஜ்வாட்டரில் உள்ள டிராகன் ரைஸ் பப் அருகே நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பின் வெற்றியைக் கொண்டாடும் போது தாக்கப்பட்டார். இவருக்கு வயது 21.

2 /4

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரூ ஹால், மூன்று ஆண்டுகளில் இரண்டு தாக்குதல்களில் இருந்து தப்பினார். 1999ஆம் ஆண்டு ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பபட்டார். குற்றவாளிகள் அவரை ஆறு முறை சுட்டனர், ஆனால் தோட்டா அவரது இடது கையில் மட்டுமே ஹாலைத் தாக்கியது. அந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். மீண்டும் 2002இல், கார் கொள்ளையர்கள் அவரை துப்பாக்கி முனையில் பிடித்து, நீண்ட தூரம் ஓட்டச் சொன்னார்கள். ஹாலின் தலையில் துப்பாக்கியை தொடர்ந்து வைத்திருந்ததால் 45 நிமிடங்களுக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவர் காரில் இருந்து தப்பி தனது வீட்டிற்கு ஓடி வந்துள்ளார்.    

3 /4

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறாமல் போனதற்கு இந்த தாக்குதல்தான் முதன்மை காரணமாக அமைந்தது. 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி லாகூரில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. அந்த வீரர்கள் லாகூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பித்தனர். இலங்கை பஸ் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், திலான் சமரவீரவின் தொடையில் தோட்டா தாக்கியது. லாகூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் மற்றும் ஒரு ஓட்டுனர் கொல்லப்பட்டனர்.

4 /4

2019 ஆம் ஆண்டில், வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது வங்கதேச வீரர்கள் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பினர். அவர்கள் தொழுகைக்காக அல் நூர் மசூதிக்குச் சென்று கொண்டிருந்தனர், அவர்கள் மசூதியில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருந்தபோது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. வங்கதேசம் அணி சற்று முன்னதாக அங்கு சென்றிருந்தால், அவர்கள் உயிருக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.