Raw Banana Benefits: வாழைக்காயில் இத்தனை நன்மை உண்டு என்று நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். பழுத்த வாழைப்பழத்திற்கு சற்றும் குறையாத, ஏன் இன்னும் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது வாழைக்காய்.
ஆரோக்கியம் அதிகம் உள்ள காய்கறிகள் என்றால், நமக்கு கீரை முதல் கத்தரிக்காய் வெள்ளரிக்காய் என பல காய்கறிகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் வாழைக்காயை நாம் குறைத்து மதிப்பிட்டுள்ளோம் என்று கூறினால் மிகையல்ல.
வாழைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதில் நார் சத்துடன், பிரீ பயோடிக் தன்மை உள்ளது.
செரிமான ஆரோக்கியம்: வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து பிரீ பயாடிக் ஆக வேலை செய்வதால், உடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் பெருகி, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராது.
நீரழிவு நோய்க்கு அருமருந்து: ரத்த சர்க்கரை நோயாளிகள் வாழைக்காயை தாராளமாக சாப்பிடலாம். இன்சுலின் உணர்திரனை மேம்படுத்தி, உடல் குளுக்கோஸ் உறிஞ்சும் நிலையை மந்தம் ஆக்கி, சாப்பிட்ட பின் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது.
உடல் பருமன்: வாழைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கலாம். அதோடு இது மெட்டபாலிசத்தையும் தூண்டுகிறது.
மூளை ஆரோக்கியம்: வாழைக்காயில் வைட்டமின் பி6 உள்ளதால், செரோட்டனின் உற்பத்தியை தூண்டி, மனதிற்கு மகிழ்ச்சி உணர்வை கொடுத்து, கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை நீக்குவதோடு, மூளையின் செயல் திறனையும் மேம்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியம்: வாழைக்காயில் ப்ரீ பயோடெக் தன்மை இருப்பதால், கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் சிறப்பாக உறிஞ்சப்பட்டு, எலும்புகள் வலுவாகிறது. இதனால் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன.
இதய ஆரோக்கியம்: வாழைக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: வாழைக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். இதனால் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் சளி இருமல் போன்ற நோய்களோடு, பருவ கால நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.