தினமும் வெள்ளை எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வெள்ளை எள் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

தினமும் கொஞ்சம் எள் சாப்பிடுவதன் மூலம் இதய பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை நம்மால் தடுக்க முடியும். அதிலும் வெள்ளை எள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. அதுகுறித்து இங்கே பார்ப்போம். 

1 /7

பொதுவாக கருப்பு எள்ளை விட வெள்ளை எள்ளில் கசப்பு தன்மை குறைவாக உள்ளதால் மக்கள் வெள்ளை எள் சாப்பிடுவதை விரும்புகின்றனர். 

2 /7

வெள்ளை எள்ளில் பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. எனவே இதனை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுவடையும். 

3 /7

வெள்ளை எள்ளை தினமும் உட்கொள்வதன் மூலம் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். முடியை பலப்படுத்துகிறது. இதில் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. 

4 /7

வெள்ளை எள்ளை தினமும் உட்கொள்வதால் பலவீனம் ஏற்படாது. ஏனென்றால் வெள்ளை எள்ளில் நார்சத்துடன் கூடிய பல உட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. 

5 /7

வெள்ளை எள்ளை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் இதயப் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்க உதவுகிறது. 

6 /7

வெள்ளை எள்ளில் வைட்டமின் பி மற்றும் ஈ ஆகியவை உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. 

7 /7

வெள்ளை எள்ளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதேபோல் செரிமானத்திற்கு உதவுகிறது.