Benefits of Raw Turmeric: மகத்துவமிக்க மஞ்சளின் அற்புத நன்மைகள்

மஞ்சள் உலகம் முழுவதும் பிரபலமான ஓர் அற்புதமான மசாலாப் பொருள். இந்தியர்கள் அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. எனவே மஞ்சளின் மற்ற நன்மைகள் என்னவென்று இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

1 /5

மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது. எனவே இது எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது

2 /5

மஞ்சளில் புரதம் (Proteins), நார்ச்சத்து (Fiber), வைட்டமின் E (Vitamin E), நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு (Iron), கால்சியம் (Calcium), மக்னீசியம், துத்தநாகம் (Zinc) போன்றவை நிறைந்துள்ளன. எனவே மஞ்சள் பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.

3 /5

 உலகின் மிக கொடிய நோயானான புற்றுநோயிலிருந்து கூட மஞ்சள் பாதுகாப்பு அளிக்கும். மஞ்சளில் உள்ள கர்குமின் கேன்சரை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. 

4 /5

உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை மஞ்சள் அதிகரிக்கிறது.ஏனெனில் இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. எனினும் உடலின் சொந்த ஆக்ஸிஜனேற்ற நொதிகளை தூண்டும்.

5 /5

மஞ்சளை பற்பொடியாக உபயோகித்தால், பற்கள் ரீதியான பிரச்சனைகள் நீங்கும் மற்றும் பற்களில் ஏற்பட்டுள்ள சொத்தையில் மஞ்சள் தூளை நன்கு வைத்து தேய்த்து வந்தால் பற்களில் உண்டாகிய பூச்சிகள் விரைவில் அரிப்பை குறைத்து விடும்.