PBKS vs CSK: தீபக் சாஹர் காயம். மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல உள்ளனர். என்ன செய்ய போகிறது சென்னை அணி?
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 1ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னை அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் மதீஷா பத்திரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் காரணமாக விளையாடவில்லை.
மதீஷா பத்திரனா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் டி20 உலக கோப்பைக்கான விசா சம்பந்தமான விஷயங்களுக்காக தங்கள் நாட்டிற்கு செல்ல உள்ளனர். இருப்பினும் அடுத்த போட்டிக்கு முன் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக தீபக் சாஹர் பாதியில் வெளியேறினார். தனது முதல் ஓவரை கூட முழுதாக வீசவில்லை. இதனால் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான்.
மேலும், பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அவரது நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடமாட்டார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான்.