Budget 2024: வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனில் மாற்றமா?

Budget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சில பெரிய வரி நிவாரண நடவடிக்கைகளை பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2024 Expectations: நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் மோடி அரசாங்கம் புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் என்றும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1 /9

இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான மோடி அரசு, இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 /9

தொழில் மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளிடம் நிதி அமைச்சகம் தனது வழக்கமான சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் தொடங்கியுள்ளது. நிதியமைச்சகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள பல திட்டங்களில், சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு வரி நிவாரணம் வழங்குவது தொடர்பான கோரிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. 

3 /9

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சில பெரிய வரி நிவாரண நடவடிக்கைகளை பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 /9

புதிய வரி விதிப்பு முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அதன் கீழ், நிலையான விலக்கு வரம்பை (ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்) அதிகரிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2023 பட்ஜெட்டில் ரூ. 50,000 நிலையான விலக்கு மற்றும் அதிக வரி விலக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், புதிய வரி விதிப்பு முறையில் இதுவரை அரசாங்கம் எதிர்பார்த்த தாக்கம் இன்னும் ஏற்படவில்லை. 

5 /9

2023 யூனியன் பட்ஜெட்டில், பழைய வரி முறையிலிருந்து (Old Tax Regime) மாறுவதற்கு வரி செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக, புதிய வரி விதிப்பு முறையில், ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் வடிவத்தில், நிர்மலா சீதாராமன் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். 7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு அளித்து, வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தினார். அந்த பட்ஜெட்டில் செய்யப்பட்ட மற்ற முக்கிய அறிவிப்பு புதிய வரி முறையை டீஃபால்ட் அதாவது இயல்புநிலை விருப்பமாக மாற்றியது.  

6 /9

முக்கிய சம்பளத்தின் கீழ் வரும் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், ஒரு பணியாளரின் மொத்த வருடாந்திர இழப்பீட்டில் இருந்து ஒரு பிளாட் கழிவாகக் கிடைக்கும். சம்பளம் பெறும் பணியாளரின் வரிப் பொறுப்பைக் கணக்கிடும் போது, ​​ஒரு நிலையான தொகை (தற்போது ரூ. 50,000), நிலையான விலக்காகக் கழிக்கப்படுகிறது. இதனால் அந்த நபருக்கு வரி விதிக்கப்படும் தொகை குறைகிறது.

7 /9

நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் மோடி அரசாங்கம் புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் என்றும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் இதை செய்தால், மக்கள் கையில் செலவழிக்க அதிக பணம் இருக்கும். இது மீண்டும் நுகர்வை அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

8 /9

பட்ஜெட்டில் விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டால் வரிப் பொறுப்பு மீதான தாக்கம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலக்கு வரம்பை தற்போதைய ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்தால், சுமார் ரூ.7.6 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரிக்குட்பட்ட வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு (Taxpayers) வரி பொறுப்பு ரூ.10,400 (சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் 4% உட்பட) குறைக்கப்படும். ரூ.1 கோடி வரையிலான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ள வரி செலுத்துவோர் ரூ.11,440 (செஸ் மற்றும் 10% கூடுதல் கட்டணம் உட்பட) சேமிக்கலாம்.

9 /9

ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்கள் ரூ.11,960 (செஸ் மற்றும் 15% கூடுதல் கட்டணம் உட்பட) குறைந்த வரிகளில் சேமிக்கலாம். 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள தனிநபர்கள் தங்கள் வரிக்குரிய வருமானத்தை ரூ.13,000 (செஸ் மற்றும் 25% கூடுதல் கட்டணம் உட்பட) குறைக்கலாம்.