Cholesterol Control With Cinnamon: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது. இதை கட்டுக்குள் வைப்பதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control With Cinnamon: நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பின் அளவும் அதிகமானால் இதய ஆரோக்கியம் உட்பட உடலன் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை பல வித மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு மசாலா. பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்டு இலவங்கப்பட்டையை கொண்டு கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பில் உதவி: கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, உங்கள் எடையை கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும். இலவங்கப்பட்டை தேநீர் பசியின்மை, பசியைக் கட்டுப்படுத்துதல், கலோரி எரித்தல், எடை இழப்பு ஆகியவற்றில் உதவுகிறது. இவை அனைத்தும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலவங்கப்பட்டை பெரிய அளவில் பயன்படுகின்றது. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் பெரிய அளவில் உதவுகின்றது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து, இலவங்கப்பட்டை இன்சுலின் ஸ்பைக்குகளைக் கட்டுப்படுத்துகிறது.
LDL கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்: இலவங்கப்பட்டை டீயை வெறும் வயிற்றில் குடிப்பது இயற்கையான முறையில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இயற்கையான வழியில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் வெறும் வயிற்றில் ஒரு கப் இலவங்கப்பட்டை நீரை குடிக்கலாம்.
HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது: இலவங்கப்பட்டை தேநீர் தமனிகளில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் சேர்வதைக் குறைப்பதைத் தவிர, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகின்றது. இது இதய பாதுகாப்பிற்கு நேரடியாக உதவும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது: காலையில் தினமும் ஒரு கப் இலவங்கப்பட்டை தேநீர் பருகி வந்தால், அது வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால், அது அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:இலவங்கப்பட்டை செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்த பானமாக கருதப்படுகின்றது. செரிமானம் நன்றாக இருந்தால் வளர்சிதை மாற்றம், புத்துணர்ச்சி, இதய ஆரோக்கியம் போன்ற உடலின் பிற செயல்பாடுகளும் நன்றாக இருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது: இலவங்கப்பட்டையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்க, குறிப்பாக தமனிகளில் குறைக்க உதவுகின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதிலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
இலவங்கப்பட்டை தேநீர்: இலவங்கப்பட்டை தேநீர் செய்ய சில இலவங்கப்பட்டை குச்சிகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். தினமும் காலையில் இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.