Health Benefits Of Kanji: சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றிவைத்த சோறு காலையில் நன்கு நொதித்துவிடும். இதில் உடலுக்கு ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் நிறைந்திருக்கும். எனவே இதனை வெறும் வயிற்றில் (Health Benefits Of Kanji In Empty Stomach) நீங்கள் அருந்தினால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
சரும பாதுகாப்பு: ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளால் கஞ்சி உங்களின் சருமத்தின் பொலிவை அதிகரிக்கும், பருக்கள் வராமல் தவிர்க்கும்.
சர்க்கரை அளவை சீராக்கும்: இதில் சற்று வினீகர் மற்றும் மசாலா பொருள்களை சேர்ப்பதன் மூலம் அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இது சர்க்கரை நோயாளிக்கும் நன்மை அளிக்கும்.
உடல் எடை குறைக்க உதவும்: இது நொறுக்க தீனிகளை திண்ணும் உணர்வை கட்டுப்படுத்தும். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது.
குடல் ஆரோக்கியமாகும்: இதில் நுண்ணுயிர்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலின் ஆரோக்கியமான நுண்ணுயிர்களை சீராக வைத்திருக்கவும் இது உதவும்.
செரிமானத்தை சீராக்கும்: இது செரிமானத்திற்கான நொதிகளை அதிகப்படுத்த தூண்டும். இதனால் செரிமானம் இயல்பாக நடக்கும்ஸ, வயிற்ரிலும் பிரச்னை இருக்காது.
நச்சுக்களை வெளியேற்றும்: கஞ்சி இயற்கையாக உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் திறன்கொண்டது. இதை உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்: நன்கு நொதித்த கஞ்சியில் கேரட், பூண்டு மற்றும் மிளகை இடித்து சேர்த்து உண்டால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதில் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் நிச்சயம் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.