Amla benefits : நெல்லிக்காய் வெறும் வயிற்றில் சாப்பிட என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் தெரியுமா? மகத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்
Nellikaai Benefits Tamil : குடல் முதல் கொழுப்பு கரைப்பது வரை ஏழு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் நெல்லிக்காயின் மகத்துவம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இத்தனை நாள் நெல்லிக்காய் மகத்துவம் தெரியாமல் இருந்திருந்தீர்கள் என்றால் இன்றாவது தெரிந்து கொள்ளுங்கள். ஆயுர்வேத மூலிகையான இதற்கு பல அற்புத பலன்கள் இருக்கின்றன. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது என்னென்ன நன்மைகளை கொடுக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.
மழை மற்றும் குளிர்காலம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாகும். வைட்டமின் சி நிறைந்த, நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று மற்றும் நோய்கள் ஆபத்தில் இருந்து உங்களை காக்கும்.
நீங்கள் அஜீரணம் அல்லது செரிமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களா? இந்த நெல்லிக்காய் ஜூஸை குடிக்கவும். நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த, நெல்லிக்காய் சாறு செரிமானத்தை சீராக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உங்கள் குடல் இயக்கத்தை சீராகும். மலச்சிக்கலைத் தடுக்கும்.
உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்க வேண்டும் என்றால் வெறும் வயிற்றில் நெல்லிச் சாற்றை முயற்சிக்கவும். இது நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
உங்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சனை பற்றி கவலைப்படுகிறீர்களா? தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு குடித்தால் தலைமுடி சிறப்பாக வளரும். இந்த ஜூஸ் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும்.
குறைந்த கலோரி உள்ள நெல்லிக்காய் சாறு எடை இழப்பு திட்டத்தில் ஒரு சிறந்த பானம். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்க உதவும்
நெல்லிக்காய் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது, இது இளமை, ஒளிரும் சருமத்தை அடைய உதவுகிறது. காலையில் இதை முதலில் குடிப்பதால், சருமத்தின் அமைப்பை மேம்படுத்தலாம்.
இந்த அற்புதமான ஆரோக்கியமான ஜூஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். மிகவும் எளிமையானது. நெல்லிக்காயை கழுவி மிக்சியில் போட்டு தண்ணீரை ஊற்றி அரைத்தால் ஜூஸ் ரெடி. இதனுடன் தேன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு இன்னும் சிறந்தது.