Hairfall Remedies Oil Bath: தீபாவளி என்றாலே, பட்டாசு, பலகாரம், கங்கா ஸ்நானம், எண்ணெய்க் குளியல் புத்தாடை என பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், குளிர்காலத்திற்கு முன் வரும் பண்டிகை சுட்டிக் காட்டும் இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
குளிர்காலம் துவங்குவதற்கு முன் வரும் தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது பாரம்பரிய வழக்கம். இந்த பாரம்பரியத்திற்கும், முடி உதிர்வதை தடுக்கும் உள்ள தொடர்பு உன்னதமானது.
குளிர்காலத்தில் முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துவிடுகிறது. தலைமுடி உதிர்வதற்கு வறண்ட கூந்தலும் முக்கியமான காரணமாகிறது. கூந்தலுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் பொலிவிழந்து காணப்படுகிறது
கூந்தல் பொலிவு இழப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்ப்பசை குறைந்துபோவது தான். தீபாவளி குளிர்காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. தீபாவளி எண்ணெய்க் குளியல் என்பது முடி மற்றும் சருமத்தின் வளமைக்கு காரணமான எண்ணெய் பயன்பாட்டை உணர்த்துகிறது
குளிர்காலத்தில் வானிலையால் கூந்தல் பாதிப்பு அதிகரிக்கிறது. முடிகளின் வேர்களில் உற்பத்தியாகும் எண்ணெய் சுரப்பு குறைந்து போவதால், நாம் எண்ணெய் தேய்ப்பதை வழக்காமாக்கிக் கொள்ள வேண்டும். தீபாவளி தொடங்கியதுமே நாம் எண்ணெய் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்
மாசுபாடு அதிகரிப்பதும் முடி ஆரோக்கியத்தை பாதிக்கு. தீபாவளியில் பட்டாசு வெடிப்பது, காற்று மாசுவை அதிகரிக்கும். எனவே, குளிர்காலத்தில் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம்
தீபாவளி நாளன்று எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நல்லெண்ணையை மிதமாக சூடாக்கிக் கொண்டு, அதில் பூண்டு, மிளகு சேர்ந்து சூடுபடுத்தவும். எண்ணெய் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு தலையில் இருந்து கால் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த பிறகு குளிக்கவும். எண்ணெய் தேய்த்துக் கொண்ட 30 நிமிடங்கள் கழித்து குக்ளிக்கவும். எண்ணெய் குளியல் எடுக்கும்போது முடி ஆரோக்கியம், சருமப் பொலிவு மட்டுமல்ல உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்
முடி உதிர்தலுக்கு பருவநிலை மட்டுமல்ல, நாம் உண்ணும் உணவுகளும் அவசியமானவை. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணலாம். இனிப்புக்கு வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தவும். வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும்