வீட்டில் அதிகம் பல்லிகள் தொல்லை உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்!

பல்லிகள் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றாலும் சிலர் அதனை பார்த்து பயப்படுவது உண்டு. எனவே அதனை வீட்டில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /7

பொதுவாக கோடைகாலம் துவங்கியவுடன் வீட்டில் பல்லிகள் தொல்லை ஆரம்பமாகிவிடும். கழிவறை சுவற்றில், சமையலறையில் என வீட்டில் பார்க்கும் இடம் எல்லாம் பல்லிகள் இருக்கும்.  

2 /7

பல்லிகள் நம்மை எதுவும் தொந்தரவு செய்யாது என்றாலும் அதனை பார்த்து சிலர் பயந்து ஓடுவதும் உண்டு. மேலும் பல்லிகளில் இருந்து வரும் சத்தமும் சிலருக்கு பிடிக்காது.  

3 /7

எனவே வீட்டில் இருந்து பல்லிகளை எப்படி விரட்டுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய செலவில்லாமல் பல்லியை வீட்டிலிருந்து வெளியேற்றலாம்.  

4 /7

உங்கள் வீட்டிலிருந்து பல்லிகளை அகற்ற சில மசாலாப் பொருட்கள் மற்றும் இருந்தால் போதும். அவற்றின் உதவியுடன் பல்லிகளை விரட்ட முடியும்.  

5 /7

வெங்காயத்தை நறுக்கி அதனுடன் பூண்டு சேர்த்து இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு பேக்கிங் சோடா, மிளகு தூள் மற்றும் அரை எலுமிச்சை சாறு சேர்க்கவும்.   

6 /7

அதன்பிறகு, இதில் ஒன்று முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து கொண்டு வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும்.   

7 /7

இந்த கலவையின் வாசனையில் பல்லிகள் வீட்டை விட்டு ஓடி விடும். இந்த இயற்கை வைத்தியத்தால் எந்த வித பிரச்சனையும் இருக்காது.