உங்கள் துணைக்கு ஒரு சிறந்த கணவராக இருப்பது மட்டும் இல்லாமல், நல்ல நண்பராகவும் இருப்பது அவசியம். ஒரு சிறந்த கணவரின் பண்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் துணையுடன் நெருக்கத்தை வளர்ப்பது ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான தொடர்பை வளர்க்கிறது. இந்த பிணைப்பு வலுவடையும் போது, நீங்கள் ஏதேனும் தவறு செய்தாலும் அதனை தைரியமாக உங்கள் துணையிடம் சொல்வீர்கள். வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுவீர்கள்.
உங்கள் பங்குதாரர் உங்களிடம் பாதுகாப்பு உணர்வை உணர வேண்டும். இந்த சூழல் அவர்களின் அச்சங்களை தயக்கமின்றி வெளிப்படுத்த அனுமதிக்கிறது, அவர்களின் கடந்த கால அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். நேர்மையாக மன்னிப்பு கேட்கவும், உங்கள் துணையுடன் வெளிப்படையாக தொடர்பு கொள்ளவும் தயாராக இருங்கள். எந்தவொரு உறவின் வெற்றிக்கும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது மிகவும் முக்கியமானது.
உங்கள் துணையின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் நல்ல உறவை உருவாக்குவது முக்கியமானது. இந்த உறவுகளை வளர்ப்பதன் மூலமும், குடும்பக் நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்வுகளில் சுறுசுறுப்பாகப் பங்கேற்பதன் மூலமும், உங்கள் துணையை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.
உங்களுக்கு துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக அவர்களுக்கு சில உணவுகள் பிடிக்காது என்பதால் அவற்றை நீங்களும் தவிர்ப்பது அவசியம். அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் உறவை வலுவாக்கலாம்.
உங்கள் துணையின் தேவைகள் மற்றும் உணர்வுகளைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக்கொள்வது அவசியம். சண்டை ஏற்படும் போது கோவத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே பிரச்சனையை சரி செய்யலாம்.