இந்த விஷயங்களில் சிக்கலே இல்லாமல் வாழலாம்... சீதாப்பழம் ஜூஸ் குடித்தால்...!

Health Benefits Of Sugar Apple Juice: கோடைகாலத்தில் சீதாப்பழம் கடைகளில் தடையில்லாமல் கிடைக்கும் என்பதால், இதன் ஜூஸை குடிப்பதால் வரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இதில் காணலாம்.

  • Feb 23, 2024, 16:23 PM IST

 

 

 

 

1 /7

Health Benefits Of Sugar Apple Juice: ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் சீதாப்பழமும் ஒன்று. இரும்புச்சத்து, மேக்னீஸியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன. வைட்டமிண் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, பி9 போன்றவை உள்ளன. மேலும் திராட்சையை விட இதில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது.   

2 /7

சீதாப்பழத்தில் அதிக சக்தியை தரும் இத்தனை வைட்டமிண்கள், ஊட்டச்சத்து, ஃபைபர் உள்ளதால், இந்த கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க சீதாப்பழ ஜூஸ் பல நன்மைகளை தரும். அதுகுறித்து இங்கு காணலாம். 

3 /7

கேன்சரை தடுக்கும்: சீதாப்பழத்தில் உள்ள சில இரசாயனங்கள் கேன்சரை எதிர்க்கும் தன்மைகள் உள்ளது. கேன்சர் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் சீதாப்பழ ஜூஸை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். 

4 /7

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: வைட்டமிண் சி இருப்பதால் ஆண்டிஆக்ஸிடண்ட் சார்ந்த நன்மைகள் மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நன்மைகளையும் சீதாப்பழம் வழங்குகிறது. காய்ச்சல், சளி போன்றவைக்கும் இந்த பழம் நிவாரணத்தை அளிக்கிறது, வெளிநாடுகளில் இந்த பழம் இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

5 /7

சருமத்திற்கு நல்லது: ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சீதாப்பழத்தின் நமது சருமத்தின் செல்களை பாதிப்பில் இருந்து தடுத்து, சருமம் ஜொலிக்க உதவும். இதனால், உங்களின் வயதாகும் தன்மை மற்றும் தோல் சுருக்கம் போன்றவற்றையும் தடுக்கும். எனவே, சீதாப்பழத்தின் ஜூஸை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் போது சருமம் பளப்பளக்கும். 

6 /7

இதயப் பிரச்னைகளை தடுக்கும்: போட்டாசியம் சீதாப்பழத்தில் அதிகம் இருப்பதால், உங்கள் ரத்தத்தில் இருக்கும் சோடியம் அளவை கடுப்படுத்தி உங்களின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எவ்வித பிரச்னையும் இதயத்தை அண்டாது. மேலும் மேக்னீசியம் அதிகம் இருப்பதால் இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கூடுதலாக உதவும்.  

7 /7

பொறுப்பு துறப்பு: சீதாப்பழத்தில் அனோனாசின் என்ற உடலின் நரம்பியல் மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஒன்று உள்ளது. இது சீதாப்பழத்தின் விதை மற்றும் தோல் பகுதியில் அதிகம் காணப்படும். இதனால், சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம். நீங்கள் சீதாப்பழ ஜூஸை குடிக்க விரும்பினால் உங்களின் மருத்துவரை ஆலோசித்து அதன்படி இதனை உட்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.