சனி பெயர்ச்சி 2025: நீதியின் அதிபதி சனி தேவ் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
நீதிக் கடவுளான சனி பகவான் மார்ச் 29, 2025 அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழைகிறார். இந்த ராசியில் சனி பெயர்ச்சியாவதால், சில ராசிகளின் பொருளாதார நிலை பலவீனமாகவே இருக்கும். உடல்நிலையும் மோசமடையலாம்.
சனி பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
சனிப்பெயர்ச்சி காரணமாக குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொருளாதாரம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகள் மனிதனை உலுக்கி விடும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
கன்னி: சனியின் சஞ்சாரம் கன்னி ராசிகளுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, இந்த நேரத்தில் உங்கள் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் நெருங்கிய உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம்.
துலாம்: சனிப்பெயர்ச்சியின் போது, துலாம் ராசிக்காரர்கள் சில புதிய நோய்களுக்கு ஆளாகலாம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் நிலை மோசமடையக்கூடும். சோம்பலைக் கைவிட்டு உடல் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக 2025 ஜூலை மற்றும் 2025 நவம்பர் காலலட்டத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பப் பிரச்சனைகள் குறித்தும் கவலைப்படுவீர்கள். குறிப்பாக சொத்து சம்பந்தமான சச்சரவுகள் ஏற்படலாம்.
கும்பம்: சனியின் சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சோதனைகளை கொடுக்கும். இந்த காலகட்டத்தில், எந்தவொரு செயலிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் மனைவியைத் தொந்தரவு செய்யலாம். நிதிபணத்தை சேமிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம்.
சனி பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை தொடங்குவதாலும் சில ராசிகளுக்கு ஏற்கனவே ஏழரை சனி உள்ளதாலும், வாழ்க்கையில் போராட்டங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
சனி பரிகாரங்கள்: ஏழைகளுக்கு உதவுவதாலும், அன்னதானம் கொடுப்பதால், சனிபகவான் மனம் மகிழ்வார். கடின உழைப்பாளிகளுக்கு சனீஸ்வரனின் அருள் கிடைக்கும். சனிக்கிழமையன்று ஹன்னுமனை வழிபடுவதன் மூலம் ஏழரை சனியின் தாக்கங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனியின் பாதிப்பு நீங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு Zee News பொறுப்பேற்காது.