குருவின் ஆசியினால் 2024 புத்தாண்டை அட்டகாசமாய் தொடங்க உள்ள ‘4’ ராசிகள்!

Guru Vakra Nivarthi: 2024 ஆம் ஆண்டு தொடங்கும் முன், பல கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றப்போகின்றன. குரு பகவான் டிசம்பர் 31 அன்று,  வக்ர நிவர்த்தி அடைகிறார். சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் போதும்.  கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு என அனைத்தும் கிடைக்கும். திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கை கூடி வரும்.

குரு பார்வையால் கிடைக்கப் போகும் சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள்: குரு பகவான் டிசம்பர் 31 அன்று,  வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்நிலையில், குரு பகவான் பார்வையால் 2024 ஆண்டில் அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய 4 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /7

Guru Vakra Nivarthi: சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் போதும், கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு என அனைத்தும் கிடைக்கும். திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கை கூடி வரும். இந்நிலையில், குரு பகவான் டிசம்பர் 31 அன்று,  வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் பார்வையால் பலன் பெறக்கூடிய ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /7

குரு பகவான் பார்வையால் 2024 ஆண்டில் அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய 4 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில ராசிகள் செல்வம், பெருமை, செழிப்பு மற்றும் அனைத்து பொருள் வசதிகளையும் அடையலாம்.  குரு பார்வையால் கிடைக்கப் போகும் சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.  

3 /7

மேஷ ராசி: எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறலாம். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். மரியாதை மற்றும் கௌரவம் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையிலும் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

4 /7

சிம்ம ராசி: நல்ல வாய்ப்புகள் தானாக தேடி வரும். பாக்கியங்கள் செல்வத்திற்கு குறைவே இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்து விதத்திலும் அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில், உங்களுக்கு வருமான ஆதாரங்கள் உருவாகும். மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.

5 /7

தனுசு ராசி: தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமணம், சுபகாரியம் அற்புதமாக நடக்கும். நிலம், வாகனம், குடும்ப சுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் தேடி வரும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் வரும். குழந்தை வாழ்க்கையில் முன்னேறலாம். மேலும், உங்களுக்கு காதல் இருந்தால் அது உங்கள் திருமணமாக மாறலாம். ஆடம்பர பொருட்களையும் வாங்கலாம். மொத்தத்தில் 2024 தொடக்கம் அட்டகாசமானதாக இருக்கும்.

6 /7

மகர ராசி: நல்ல வேலை கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும்.செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். குருவினால் உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீரப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.