Mangal Gochar, Impact on Zodiac Signs: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
இது தவிர கிரகங்களின் இயக்கங்களும், உதய அஸ்தமன நிலைகளும் அவ்வப்போது மாறுகின்றன. கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் செவ்வாய் கிரகம் சமீபத்தில் தனது ராசியை மாற்றினார். ஜூலை 1 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் நுழைந்தார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை அவர் இந்த ராசியில் இருக்கப் போகிறார். செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைகவுள்ளன என இந்த பதிவில் காணலாம்.
நிலம், சொத்து, தைரியம் மற்றும் பலம் ஆகியவற்றைக் கொடுக்கும் செவ்வாய் கிரகம் சிம்ம ராசியில் ஜூலை 1, 2023 அன்று நுழைந்துள்ளார். செவ்வாய் ஆகஸ்ட் 17, 2023 வரை சிம்மத்தில் இருப்பார். இதனால் அடுத்த 36 நாட்களுக்கு 12 ராசிகளிலும் செவ்வாய் பெயர்ச்சியின் பலன்கள் இருக்கும்.
செவ்வாய் கிரகம் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கிரகங்களை போலவே செவ்வாய் கிரகத்தின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் 36 நாட்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. இந்த ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்: இந்த மாத தொடக்கத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இவர்களின் தைரியம் அதிகரிக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த நேரம் நல்ல பலனைத் தரும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் பல நன்மைகளைப் பெறுவார்கள். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களும் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
மீனம்: வரும் 36 நாட்கள் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மகிழ்ச்சியைத் தரப் போகிறது. இந்த நேரத்தில் இவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் பதவி, செல்வம் மற்றும் கௌரவம் கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.
செவ்வாய் கிரகத்தை மகிழ்விக்க முருகப்பெருமானை வழிபட வேண்டும். மேலும் ‘ஓம் வீரத்வஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’என்ற ஸ்தோத்திரத்தை சொல்வது பலன் தரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.