வரி சேமிப்பு FD: பெரும்பாலான நிறுவனங்கள் வரியைச் சேமிக்க, நீங்கள் செய்துள்ள முதலீடுகள் முறித்த தகவல்களையும் சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொள்கின்றன.
வரியைச் சேமிக்க இதுவரை நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால், நீங்கள் 5 வருட வரி சேமிப்பு FD கணக்கில் முதலீடு செய்யலாம். இது தொடர்பாக வங்கிகள் வழங்கும் முதலீட்டு திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
ஐந்தாண்டு வரி சேமிப்பு FD குறைந்த நடுத்தர வரி அடைப்பு வகுப்பினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரிவு 80C இன் கீழ் ஐந்தாண்டு FDக்கு வரி விலக்கு கிடைக்கும். 80சியின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும்.
வரி விலக்கு பலனுடன் HDFC வங்கியின் 5 வருட FD முதலீடு மீது வங்கி வழங்கும் வட்டி விகிதம் 7%.
வரி விலக்கு பலனுடன் பாரத ஸ்டேட் வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 6.5%
வரி விலக்கு பலனுடன் ஐசிஐசிஐ வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 7%.
வரி விலக்கு பலனுடன் ஆக்ஸிஸ் வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 7%.
வரி விலக்கு பலனுடன் கனரா வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 6.7%
வரி விலக்கு பலனுடன் இந்தியன் வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 6.25%.