இருமல் சளியை போக்கும் கருப்பு மிளகு போக்கும் பிற நோய்களின் பட்டியல்! மிஸ் பண்ணிடாதீங்க!

Pepper For Health: மிளகு பயன்படுத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மசாலாப் பொருட்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டும் மிளகு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது

கருப்பு மிளகில் உள்ள சில இரசாயன கூறுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. எந்தெந்த நோய்களை கருப்பு மிளகு போக்கும்? தெரிந்துக் கொள்வோம்

1 /7

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கருப்பு மிளகின் சில முக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். அஞ்சலறைப்பெட்டியில் இருந்தாலும், இது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல...

2 /7

சளி, கபம், செரிமானம், தும்மல், பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் வெவ்வேறு வகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது மிளகுத்தூள்

3 /7

வைட்டமின் சி, ஏ, கரோட்டின் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ள கருப்பு மிளகு  தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. புற்றுநோய் மற்றும் பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

4 /7

மிளகு ரசம் உடலுக்கு நல்லது. அது மட்டுமல்ல, எந்த சூப்பாக இருந்தாலும், அதில் மிளகை சேர்ப்பது வழக்கம். சூப்பில் எந்த காய்கறி மாறினாலும் மாறாமல் இருப்பது மிளகுத்தூள் மட்டுமே

5 /7

கருப்பு மிளகில் காணப்படும் பைப்பரின் செரிமான செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இது வயிற்றைத் தூண்டுகிறது, இதன் காரணமாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிக அளவில் சுரக்கப்படுகிறது. இது உணவை ஜீரணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6 /7

இருமல் மற்றும் சளியால் அவதிப்படுபவர்கள் கருப்பு மிளகு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கருப்பு மிளகு இயற்கையாகவே ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்த உதவுகிறது.

7 /7

கருப்பு மிளகாயில் காணப்படும் பைப்பரின் கவலை மற்றும் மன அழுத்தத்தை நீக்க உதவுகிறது. மூளையை செயல்படுத்தி நாம் சரியாக செயல்பட உதவுகிறது.