இலவங்கப்பட்டை உணவிற்கு சுவை மற்றும் மணத்தை கொடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தற்போது, தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோய்க்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், நோயின் பிடியில் இருந்து தப்பி, ஆரோக்கியமாக வாழ இலவங்க பட்டை உதவும்.
இலவங்க பட்டையில், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை ஏராளமாக உள்ள நிலையில் இலவங்கப்பட்டை பானத்தை தினமும் குடிப்பதால், நமக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேதத்தில், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இலவஙக்பட்டை உதவும் என கூறப்பட்டுள்ளது. உணவுக்கு சுவை சேர்க்கும் இந்த மசாலா, நீரிழிவு நோயாளிகளின் பசியை கடுப்படுத்துவது மட்டுமின்றி, இன்சுலினை தூண்டி அவர்களின் சுகர் லெலவலை எளிதில் கட்டுப்படுத்தவும் முடியும்.
PCOS: இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்களுக்கு கூட PCOS என்னும் மாத விடாய் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிசிஓஎஸ் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபட இலவங்க பட்டையை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நினைவாற்றல்: தினமும் இலவங்கப்பட்டை நீரை தினமும் குடித்து வந்தால், நமது மூளை சிறப்பாக செயல்பட உதவும். இலவங்கப்பட்டை நமது செறிவுத்திறன் மற்றும் நினைவாற்றலை வலுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இதன் மூலம் அல்சைமர் நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.
செரிமானம்: இலவங்கப்பட்டையில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் காணப்படுகின்றன. தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் பெருமளவில் குணமாகும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி: இலவங்கப்பட்டையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. எனவே இதனை தினமும் அருந்துவதால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், சளி, இருமல், காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களின் அபாயம் பெருமளவில் குறையும்.
உடல் பருமன்: மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட இலவங்கபட்டை, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்தாக இருக்கும்.
கொலஸ்ட்ரால்: இலவங்கப்பட்டை பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகளில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு பெருமளவு குறையும். இதனால் இரத்த அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களை வராமல் தடுக்கலாம்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)