டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்!

Team India T20: இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

  • Jul 08, 2024, 17:32 PM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் மொத்தம் 15 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

1 /8

டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை கூட இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.   

2 /8

அதேபோல், முதல்முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் ஆனது. அது ஒருபுறம் இருக்க, இந்திய தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 5 வீரர்களை இங்க காணலாம்.   

3 /8

5. சூர்யகுமார் யாதவ்: 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில், 216 ரன்களை சேஸ் செய்த போது சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஆனால், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.   

4 /8

5. யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் சதம் அடித்தார். இந்த தொடரில் இந்திய அணி தங்கம் வென்றது.   

5 /8

3. கேஎல் ராகுல்: 2016இல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 245 ரன்களை சேஸ் செய்த போது கேஎல் ராகுல் 46 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் அந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.  

6 /8

3. அபிஷேக் சர்மா: நேற்று (ஜூலை 7) நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணியும் 100 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.   

7 /8

2. சூர்யகுமார் யாதவ்: கடந்தாண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணிக்கு 228 ரன்கள் என்ற இலக்கை அடைய உதவினார். அந்த போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

8 /8

1. ரோஹித் சர்மா: 2017ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார். அந்த போட்டியில் இந்தியா 260 ரன்களை குவித்தது. இலங்கை அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.