பணத்தை திட்டமிட்டு சேமித்தால் போதும்... நீங்களும் விரைவில் அம்பானி ஆகலாம்!

Money Tips: சில நேரங்களில் பணத்தை சரியாக திட்டமிட்டு சேமிக்காததாலேயே பண நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. பின் அதனை தீர்க்க கடன் மேல் கடன் வாங்கி சிக்கலில் சிக்கி விடுகிறோம்.

பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதற்கான சில எளிய வழிகாட்டியை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பணத்தின் ஒரு பகுதியை திட்டமிட்டு சேமித்து, உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளலாம்.

1 /5

உங்கள் பணம் எங்கு செல்கிறது, எதற்கு செலவாகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால், தேவைப்படும் நேரத்தில் மாற்றங்களைச் செய்வது எளிதாக இருக்கும். ஒரு மாதம் வரை செலவு கணக்குகளை எழுதி வைத்துக்கொள்வது நல்லது. அதன்பிறகு அதில் அனாவசிய செலவு எங்கு செய்யப்பட்டது என்பது அறிந்து கொண்டு தவிர்க்கலாம்.

2 /5

ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என்று தெரிந்தவுடன், உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் உங்கள் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க முடியும். பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால், அதிக செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். மறுபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம். 

3 /5

ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளப் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவும்.  உங்கள் வருமானத்தில் 10 முதல் 15 சதவிகிதம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

4 /5

பணத்தை பெருக்குவது ஒரு கலை. இதற்கு, புத்திசாலித்தனமான முதலீட்டுத் திட்டமிடல் மிகவும் அவசியம். நாம் செய்யும் முதலீடு எப்போதும் பாதுகாப்பாகவும் நீண்ட காலத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். இதனுடன், எந்த முதலீட்டுத் திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதும் மிக அவசியம்.  பரஸ்பர நிதியங்கள் நல்ல லாபத்தை கொடுக்கின்றன.

5 /5

பணத்தை பெருக்க கூட்டு வட்டி அளிக்கும் திட்டத்தில் சேரலாம். முதல் ஆண்டில் அசல் முதலீட்டின் மீதான வட்டி கிடைக்கும். அடுத்த ஆண்டில், அசல் மற்றும் வட்டி இரண்டு தொகைகளுக்கும் வட்டி கிடைக்கும். இதே போல்  கூட்டு வட்டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்கு வட்டி கிடைப்பதால்  பணம் எளிதில் பெருகிக் கொண்டே போகும்.