நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் மிகவும் தூக்கம் முக்கியமானது. தூக்க சரியாக இலை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
ஆரோக்கியமான வயது வந்தோர் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதைச் செய்வதால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை டாக்டர் இம்ரான் அகமது கூறும் விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
நல்ல தூக்கம்: உடலுக்கு ஆரோக்கியமான உணவு தேவை என்பதைப் போல், நல்ல தூக்கமும் அவசியம். நல்ல தூக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தவிர்க்க தினமும் 8 மணி தூக்கம் அவசியம்.
தூக்கமின்மை: இரவில் போதுமான மற்றும் நல்ல தூக்கம் இல்லாதவர்கள், அல்லது தூக்கமின்மை பிரச்சனையினால் நீண்ட காலம் அவதிப்படுபவர்களுக்கு, மூளை பக்கவாதம், இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நினைவாற்றல்: தினம் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிப்பவர்களின் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதன் காரணமாக நினைவாற்றல் அதிகரிக்கிறது. நல்ல ஓய்வு மூளை சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும்.
உடல் பருமனைக் குறைத்தல்: இது உங்கள் எடையைக் குறைக்க, நல்ல ஆரோக்கியமான உணவுடன், நல்ல தூக்கமும் அவசியம். தூக்க இல்லை என்றால், உடலில் மன அழுத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் அளவு அதிகரித்தும், உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இரத்த அழுத்தம்: நல்ல தூக்கம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மிக அவசியம். தூக்கமின்மை காரணமாக, மன அழுத்தம் அதிகரிப்பதால், ரத்த அழுத்த அளவும் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி: தூக்கம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த நல்ல தூக்கம் அவசியம். இது உங்கள் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அளிக்கிறது. இதனால், பல வித நோய்கள் ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
இதய நோய் அபாயம் குறையும்: நல்ல தூக்கம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அப்பாயம் அதிகரித்து வரும் நிலையில், நல்ல தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது
ஆற்றல் அளவு: நல்ல உறக்கத்திற்குப் பிறகு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஏனெனில் உங்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. ஒரு நல்ல தூக்கம் உங்கள் தன்னம்பிக்கை உணர்வை அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். எனவே, உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.