G20 2022: உலகத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

G20 2022: பாலியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தோனேசிய தலைநகர் பாலியில் இன்று (நவம்பர் 15, 2022) வருடாந்திர ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது, உலகத் தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் உண்டாகியுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

மேலும் படிக்க | நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொருளாதார பயங்கரவாதம்: COP27 இல் ஈரான்

1 /5

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கை குலுக்கினார். இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்க உறவுகளை ஆய்வு செய்தனர். ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, எடுக்கும் எந்த முடிவும் அதன் தேசிய நலனைக் கருத்தில் கொண்டுதான் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. (புகைப்படம்: ட்விட்டர்)

2 /5

பிரிட்டனின் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதல் முறையாக இந்தோனேசியாவின் பாலியில் சந்தித்தார். ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றதை புலம்பெயர்ந்த இந்தியர்கள் பரவலாக கொண்டாடினார்கள். முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் பதவிக்கு சுனக் நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தார். (புகைப்படம்: ட்விட்டர்)

3 /5

பாலியில் நடைபெற்ற ஜி20 விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட 2020 கல்வான் சம்பவத்திற்குப் பிறகு இதுபோன்ற சந்திப்பு இதுவே முதல்முறையாக நடைபெறுகிறது (புகைப்படம்: ட்விட்டர்)

4 /5

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 மாநாட்டின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். பாலியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் பிரதமர் கலந்துரையாடினார். (புகைப்படம்: ட்விட்டர்)

5 /5

ஜி20 மாநாட்டையொட்டி, பாலியில் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.   (புகைப்படம்: ட்விட்டர்)