Health Tips: உடலில் நல்ல கொலஸ்ட்ராலை (HDL Cholesterol) அதிகரிக்க செய்யும் உணவுகளை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், 7 உணவுகள் உங்களின் சாப்பாட்டுத் தட்டில் தினமும் இடம்பெறும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
நல்ல கொலஸ்ட்ரால் (HDL Cholesterol), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) என இரு வகை கொலஸ்ட்ரால்கள் உள்ளன. இதில் கெட்ட கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடாகும். நல்ல கொலஸ்ட்ரால் உடலில் இடம்பெறுவது அவசியம். எனவே, கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றாலே அந்த உணவை ஒதுக்கக் கூடாது. அவற்றில் எது நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் கொண்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் 7 உணவுகளை இங்கே காணலாம்.
தேங்காய் எண்ணெய்: இதில் 90% நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை தூண்டும், தேவையின்றி எழும் அதிக பசியை கட்டுப்படுத்தும். ஒருநாளுக்கு மட்டும் இது 129 கலோரிகளை கொடுக்கும்.
ஃபேட்டி மீன்கள்: ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக இருக்கும் மீன்கள், நல்ல கொழுப்பை உடலில் அதிகரிக்கச் செய்யும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். சால்மன், மத்தி மீன், சூரை மீன் ஆகியவை இதற்கு உதாரணம்.
டார்க் சாக்லேட்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், கனிமங்கள், ஃபைபர்கள் மட்டுமின்றி நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கிறது. இதனை சாப்பிட்டால் இதய நோய் வரும் ஆபத்து குறையும். தோலின் வயதாகும் தன்மையை தாமதமாக்கும்.
முட்டை: இதனை நீங்கள் தினமும் சாப்பிடலாம். இதில் வைட்டமிண் டி உள்பட மற்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதேபோல், இதை முழுவதுமாக சாப்பிட்டாலம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
ஆலிவ் ஆயில்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமிண் இ, கே ஆகியவை அதிகம் இருக்கின்ன. இது உடல் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும், கெட்ட கொலஸ்ட்ராலால் வரும் பிரச்னைகளை குறைக்கும், அதிக ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
நட்ஸ்: வேர்க்கடலை, வால்நட்ஸ், பிஸ்தா போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும் கொழுப்புகளை பெற்றுள்ளன. தாவர ஸ்டெரோல்கள் என்ற ஒன்றும் இதில் உள்ளது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
சீஸ்: இதனை பாலாடைக்கட்டி எனவும் சொல்வார்கள். இதில் புரதம், கால்சியம், வைட்டமிண் பி12 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நல்ல கொலஸ்ட்ராலை அதகிரிக்கும். அதேபோல் நீங்கள் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது கிடைக்கும் புரதம் இதைச் சாப்பிட்டாலே கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களை கொண்டு உங்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது. எனினும், இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதற்கு Zee News பொறுப்பேற்காது.