சில மரங்கள் மற்றும் செடிகள் ஜோதிடத்தில் மிகவும் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த செடிகளை வீட்டில் வைத்தால் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த மரங்களும் செடிகளும் வீட்டின் காற்றை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், செல்வத்தையும், செழுமையையும், பெரிதும் அதிகரிக்கின்றன
சில அதிர்ஷ்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்ட வீடுகளில் கடவுளில் அருளும், வாழ்வில் ஐஸ்வர்யமும் நேர்மறை சக்தியும் நிறைந்து இருக்கும்.
சில மரங்கள் மற்றும் தாவரங்களும் வீட்டின் காற்றை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், செல்வத்தையும், செழுமையையும் பெரிதும் அதிகரிக்கின்றன. சில அதிர்ஷ்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்ட வீடுகளில் கடவுளில் அருளும், வாழ்வில் ஐஸ்வர்யமும் நேர்மறை சக்தியும் நிறைந்து இருக்கும்.
துளசி செடி இந்து மதத்தில் மிகவும் போற்றப்படுகிறது, வீட்டில் துளசி செடியை வைத்திருப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அள்ளி தருகிறது. வீட்டில் துளசி இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும், எனவே இது ஸ்ரீ துளசி என்று அழைக்கப்படுகிறது. பல வகையான பிரச்சனைகளைத் தடுக்கிறது. துளசி பகவான் விஷ்ணுவிற்கும் அன்னை லட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
வீட்டின் தெற்கு திசையில் ஷமி மரம் என்னும் வன்னி மரத்தை நடுவதன் மூலம் சனியின் அசுப தாக்கங்களிலிருந்து விடுபடுவதுடன் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். சிவபெருமானின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் இம்மரம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடையே பரஸ்பர அன்பும், நல்ல முன்னேற்றமும் உண்டாகும்.
வீட்டில் சிலந்தி செடியை வைப்பதால் சுற்றுப்புற காற்று சுத்தமாக இருப்பதுடன் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இந்த செடி பல நோய்களை முடிவுக்குக் கொண்டுவருகிறது. வாழ்க்கையில் புதிய நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. பணியிடத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், ஸ்பைடர் செடியை அருகில் வைத்திருப்பது வாழ்க்கைக்கு புதிய திசையை அளிக்கிறது.
ஜேட் செடி வீட்டின் வாஸ்து குறைபாடுகளைநீக்குகிறது. இந்த செடியை வீட்டின் பிரதான வாயிலின் சரியான திசையில் வைக்க வேண்டும். இந்த செடி வைத்திருப்பதால் நிதி சிக்கல்களிலிருந்து விடுபடலாம். இந்த செடி வீட்டில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே பாசம் நிலைத்திருப்பதோடு, உறவையும் பலப்படுத்துகிறது.
வீட்டில் ஒரு மணி பிளாண்ட் இருப்பது நல்லது. இந்த மணி பிளாண்ட் பணம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த செடி வளரும் போது, செல்வம் மற்றும் கவுரவம் மேம்படுகிறது. ஜோதிடத்தில், இந்த செடி ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியான சுக்கிரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் புதிய ஆற்றலை கொண்டு வருகிறது.
துளசியைப் போலவே அபராஜிதா செடியும் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. சங்குப்பூ செடி என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் இந்த செடி இருப்பதன் மூலம் லட்சுமி தேவியே வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இச்செடியால் செல்வம், தானியங்கள் இல்லாமை நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.இந்த செடி மகா விஷ்ணு மற்றும் சிவ பெருமான ஆகிய மிகவும் பிடித்தமானது.