Transport Employees Latest News: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
Transport Employees Salary Updates: அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வருகின்ற 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27, 28 தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதுக்குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ம் தேதி உடன் காலாவதியானது.
இதனால் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் எனவும் அறிவிப்பு.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும்.
டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொமுச உள்ளிட்ட கட்சி சார்ந்த 13 தொழிற்சங்கங்களும், டிசம்பர் 28 ஆம் தேதி மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தொழிற்சங்கங்களை இரண்டாக பிரித்து ஊதிய உயர்வான பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
கடந்த முறை அடிப்படை ஊதியத்தை 5% உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 15% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.