வாட்ஸ்அப்பின் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை டெஸ்க்டாப் கணினிகளிலும் பயன்படுத்தலாம். அது எப்படி என்பது தெரியுமா? இப்படித்தான்...
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை டெஸ்க்டாப் கணினியில் பயன்படுத்துகிறோம். குரல் மற்றும் வீடியோ அழைப்பையும் டெஸ்க்டாப் கணினி மூலமாகவே மேற்கொள்ள முடியும் என்பது பலருக்கு தெரியாது. மிகவும் சுலபமான அந்த வழிமுறையை தெரிந்துக் கொள்ளுங்கள்...
Also Read | Google வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
பெரிய திரைகளில் அழைப்புகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கையினால், வீடியோ-கான்பரன்சிங் பிக்விக்ஸ் ஜூம் (bigwigs Zoom) மற்றும் கூகுள் மீட் (Google Meet) போன்றவற்றிற்கு இணையாக வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக உருவெடுக்கும் திட்டம் தொடர்பான தெளிவாக இலக்குக் எதுவும் நிறுவனத்திடம் இல்லை.
குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை இயல்பாக பாதுகாப்பாக பயன்படுத்த புதிய அம்சங்களை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ்அப் அழைப்பை மொபைலில் இருந்து ஒருவர் செய்கிறாரா அல்லது அல்லது கணினிகளிலிருந்தா என்பதைக் கேட்கவோ பார்க்கவோ முடியாது.
எதிர்காலத்தில் குழுவாக குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் சேர்க்கும் விதத்தில் இந்த அம்சத்தை விரிவுபடுத்தும் திட்டமும் உண்டு
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஒரே நாளில் இதுவரை 1.4 பில்லியன் குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு லாக்டவுனின்போது தொலைபேசிகளில் அழைக்கும் வழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது