காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக பச்சை காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, அவை எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் உதவுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் நாம் உண்ணும் உணவுப் பழக்கமே, கடுமையான நோய்களுக்கு காரணமாகிறது. எனவே ஆரோக்கியமாக வாழ உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ப்ரோக்கோலி இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு. இதில் புரதம், கால்சியம், குர்செடின், கார்போஹைட்ரேட், இரும்பு, வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சூப், காய்கறி அல்லது சாலட் வடிவில் உணவில் சேர்க்கவும்.
கீரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இதில் இரும்பு, புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளன. இது உங்களை பல நோய்களிலிருந்து பாதுகாத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
கேரட்டில், இரும்பு, சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் ஏ மற்றும் பி 6 ஆகியவற்றுடன் வைட்டமின் சி யின் நல்ல ஆதாரமாக திகழ்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
பல வகையான தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் முக்கியமாக உள்ள பூண்டில் உள்ள அல்லிசின், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் கட்டிகள் ஏற்பட அனுமதிக்காது.
வெண்டைகாயில், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இதைச் சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.