Break your fear and show your courage: அனைவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் அச்சம் இருக்கும். உங்கள் அச்சத்தை உடைத்தெறிந்து தைரியத்தை வெளிக்காட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அச்சங்களை அடையாளம் காணவும்: மனதைத் திறந்து சுயமாகச் சிந்திக்க, உங்கள் ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்க, சுதந்திர சிந்தனையாளராக மாற, உங்கள் மதிப்புகள் என்ன என்பதை அறிய, உங்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்க உதவும் உணர்வுகள், கனவுகள், வலிகள், அச்சங்கள், போன்றவை அடையாளம் காண உதவியாக இருக்க இது உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
அச்சம் தவிர்: பயம் அல்லது கவலை இவ்விரண்டையும் நீங்கள் உணரும்போது தெளிவாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் அதற்காக அச்சங்களை எதிர்கொள்ளுங்கள். அச்சத்தை உடைத்து மகிழ்ச்சியுடன் இருக்க உங்களை நீங்களே மாற்ற நினையுங்கள்.
உங்களை நீங்களேப் பயிற்றுவிக்கவும்: தன்னம்பிக்கையை மேம்படுத்த மற்றும் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நம்முள் உள்ளது என்பதை உணரவும். நம் அறிவு மற்றும் திறன் ஆகிய இரண்டும் நம் தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரம் போன்றவை மாற்ற உதவுகிறது. இதை நாம் எவ்வளவு எளிதில் கற்றுக்கொள்கிறோமோ அதற்குச் சரிசமமாக நம் சவால்களைச் சமாளிக்க முடியும். மேலும் இது நம் இலக்குகளை அடைய அதிக நம்பிக்கையைக் கொடுக்கும்.
ஆதரவைத் தேடு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடினால் நம்முள் தோன்றும் அச்சத்தைப் பகிர முடியும். அதற்கான வழிகாட்டியை யாராவது ஒருவர் நமக்கு அளிப்பர். நம் கஷ்டங்கள் மற்றும் அச்சம் போன்றவை ஏதேனும் மனதில் தோன்றினால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து தன் அச்சத்தைக் குறைத்து ஊக்கத்தை அளிக்க உதவும்.
இலக்குகளை அமைக்கவும்: ஒரு இலக்கை உருவாக்குவதற்கு முன்னதாக, நீங்கள் எந்த இலக்கை அடைய முயல்கிறீர்களோ அதற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கவும். இலக்கை அடைய உன்னிப்பாகச் சிந்திக்கவும். நீங்கள் அடைய விரும்பும் இலக்கு வரும் வரை அதற்கான முழு முயற்சி மற்றும் பயிற்சி பெறுங்கள்.
நினைவாற்றல் பயிற்சி: நினைவாற்றலுக்கான பாதையை முதலில் நாம் உருவாக்க வேண்டும், நினைவாற்றல் என்பது ஒரு பயிற்சியை விட வலிமை அதிகமானது. இது ஒரு வாழ்க்கைக்கான வழி முறை. நாம் தியானத்திற்கு நேரத்தை ஒதுக்கினால் நினைவாற்றல் கூடும்.அன்று அன்று என்ன நிகழ்கிறதோ அதில் மனதைத் திருப்பிக் கவனம் செலுத்துங்கள்.
முன்னேற்றம் அடையச் சிந்தியுங்கள்: அச்சங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்தையும், உணர்வையும் வைத்து அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கிச் செல்லுங்கள். சிறிய வெற்றியைப் பலத் தூண்களாக மாற்றுங்கள். அச்சத்தைத் தவிர்க்க இது ஒரு ஊக்கத்தை அதிகரிக்க உதவும்.
சுய அன்பு மற்றும் தன்னம்பிக்கை: நீங்கள் உங்களை நேசிக்கப் பழகுங்கள், அனைவரும் நினைவில் வைக்க வேண்டிய ஒன்று தன்னம்பிக்கை, நாம் தேவையற்ற நேரத்திலும், சூழ்நிலையிலும் பயப்படுவது நம்மை நாமே அச்சத்திற்குக் கொண்டு செல்லும் பாதையாக மாறிவிடும். அதனால் நாம் சொந்த வேகத்தில் வளர நம் மனம் அனுமதிக்கத் தன்னம்பிக்கை வழிகாட்டியாக இருக்கும்.