Five Rupee Coin News: ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தின் உற்பத்தியை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 5 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது!
Reserve Bank of India Latest News: புத்தாண்டை முன்னிட்டு ஐந்து ரூபாய் நாணயம் விஷயமாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு முக்கியமான முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது உண்மையா? ரிசர்வ் பேங்க் எடுத்த முடிவு என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் புதிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு உரிமை உள்ளது. தற்போது இந்தியாவின் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
2016ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது. தற்போது 5 ரூபாய் நாணயம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளுடன், நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. அதில் ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளுடன் ரூ1, ரூ2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.
நாம் அனைவரும் இரண்டு வகையான ஐந்து ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம், மற்ற நாணயங்களை விட அது தடிமனாக இருப்பதைப் பார்த்திருப்போம். ஒன்று பித்தளை, மற்றொன்று தடிமனான உலோகத்தால் இருக்கும். இப்போது இந்த நாணயங்களின் புழக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றன. இதற்கு காரணம் ஐந்து ரூபாய் நாணயத்தின் உற்பத்தியை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.
தடிமனான உலோகத்தால் 5 ரூபாய் நாணயம் உருவாக்க ஆகும் செலவு என்பது 5 ரூபாயை விட அதிகம் என்பதாலும், 5 ரூபாய் நாணயத்தின் எடை 9 கிராமுக்கு மேல் இருந்தாலும், ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தின் உற்பத்தியை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 5 ரூபாய் பித்தளை நாணயங்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. அதேநேரம் குறைவாக புழக்கத்தில் இருக்கும் தடிமனமான நாணயத்தை கவர்மெண்ட் ஸ்டாப் பண்ண போறாங்க.
இந்த தடிமனான 5 ரூபாய் நாணயங்களை நிறுத்துவதற்கு மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால், அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உலோகத்தை உருக்கி நான்கைந்து பிளேடுகளை உருவாக்கலாம். அவற்றின் மதிப்பு 5 ரூபாய்க்கு மேல் இருக்கும். மறுபுறம் வங்களாதேஷ் நாட்டுக்கு இந்த ரூ.5 நாணயங்கள் எல்லாம் கடத்தி செல்வதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தடிமனமான 5 ரூபாய் நாணயங்கள் எல்லாம் கடத்தி நான்கு அல்லது ஐந்து பிளேடுகள் உருவாக்கி விக்கிறதாக வதந்தி பரவிக்கிட்டு இருப்பது காரணமாக உள்ளது.
தடிமனமான 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்போற தகவல் வெளிய வந்திருக்கிறது. ஆனால் இது சம்பந்த்மாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமா எந்த தகவலும் இல்லை.
5 ரூபாய் நாணயங்கள் முறைக்கேடாக பயன்படுத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.