ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்

Ration Card Free Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து முக்கியமான தகவல் வெளியுள்ளது. அது சம்பந்தமான முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளுவோம்.

Good News For Ration Card Holders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் கோதுமை விநியோகிப்பதில் தட்டுப்பாடு நிலவி வந்தது. தமிழக அரசின் பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, கோதுமை தட்டுப்பாட்டுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சியை தந்துள்ளது.

1 /8

தமிழக அரசின் தொடர் முயற்சியால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். அதுக்குறித்து பார்ப்போம்.

2 /8

மத்திய அரசை பொறுத்தவரை தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை 1,038 டன்னாக கடந்த ஆண்டு குறைத்தது. இதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 

3 /8

கோதுமை இருப்பை பொறுத்து ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ என முதலில் வருவோருக்கு கோதுமை விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பல ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை கிடைக்காமல் ஏமாற்றமும் அடைந்தனர்.

4 /8

இதனையடுத்து தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமையை வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் மோதுமை தட்டுப்பாடு சம்பந்தமாக தமிழக அமைச்சர்கள், டெல்லி சென்று மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்கள். 

5 /8

இது மட்டுமல்லாமல் தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணர், உணவு துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய உணவுத் துறை அதிகாரிகளையும் சந்தித்து வலியுறுத்தினர். 

6 /8

இதையடுத்து தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை மாதம் 8,500 டன்னில் இருந்து 17,100 டன்னாக அதிகரித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த மாதமே கோதுமை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. இதனால் பண்டிகை காலம் என்பதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமையை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

7 /8

இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பானது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

8 /8

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோவும் மற்ற இடங்களில் 2 கிலோ வரையும் கோதுமை வழங்கப்படுகிறது.