குழந்தைகளுக்குச் செரிமான பிரச்சனையா..கவலையை விடுங்க இதை மட்டும் வீட்டில் கடைப்பிடிங்க!

குழந்தைகளுக்கு உண்டாகும் அஜீரணத்தை சரிசெய்யப் பெற்றோர்கள் வீட்டில் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செரிமானத்தை ஊக்குவிக்கலாம். மேலும் இதுபோன்ற வீட்டு வைத்தியங்கள் அஜீரணத்தை குறைக்கிறது என்று கூறுகின்றனர். 

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கவனம் அதிகமாக இருக்க வேண்டும். படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் பிள்ளைகள் திறமையாகச் செயல்பட உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். வெற்றியாளராக வாழ்க்கையில் விளங்கக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அதில் ஒன்று அஜீரண பிரச்சனையைச் சரிசெய்வது. இதுபற்றி விளக்கமாகக் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

1 /8

சீரக விதைகள்: செரிமான பானமாகக் கூறப்படும் சீரக விதைகள் அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க வைக்கலாம். இது செரிமானத்திற்கு உதவுவதாகச் சொல்லப்படுகிறது. 

2 /8

பெருஞ்சீரகம் விதைகள்: உணவு சாப்பிட்ட பின் குழந்தைகளுக்கு சில பெருஞ்சீரகம் விதைகளைக் கொடுத்து மென்று சாப்பிட வைக்கலாம். இது குடல் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் அமிலத்தன்மையைத் தடுக்கிறது.   

3 /8

இஞ்சி: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள்  நிறைந்துள்ள. இதனைக் குழந்தைகளுக்கு இஞ்சி தேநீராகக் கொடுக்கலாம் அல்லது சிறிதளவில் உணவில் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம்.   

4 /8

மூலிகை தேநீர்: மிளகுக்கீரை அல்லது பிற மூலிகை தேநீர் போன்ற மூலிகை தேநீர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. 

5 /8

சாதுவான உணவுகள்: உங்கள் குழந்தைகளுக்கு வாழைப்பழங்கள், அரிசி, ஆப்பிள் மற்றும் ரொட்டி போன்ற உணவுகளைக் கொடுங்கள். 

6 /8

ஓய்வு: குழந்தைகளுக்குச் சிறந்த நிம்மதியான தூக்கம் தினசரி பெற்றோர்கள் தவறாமல் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் கடினமான செயல்களைத் தவிர்க்க இந்த ஓய்வு உதவுகிறது. 

7 /8

நீரேற்றம்: தண்ணீர் அடிக்கடி குடிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் தினசரி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் செரிமானத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.   

8 /8

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)