SRH vs MI: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்துள்ள அணி என்ற சாதனையை படைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி 263 ரன்கள் குவித்திருந்தது.
சன்ரைசர்ஸ் சனி தரப்பில் டிராவி ஹெட் 24 பந்திகளில் 62 ரன்களும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்களும், ஹென்றி க்ளாசன் 34 பகுதிகளில் 80 ரன்கள் குவித்துள்ளனர்.
மும்பை அணி தரப்பில் பும்ரா மட்டுமே நான்கு ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்துள்ளார், மற்ற அனைவரும் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கி உள்ளனர்.