விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறும் 4-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். 2019-ல் ரோஹித் சர்மா ஏராளமான ரன்களைக் குவித்தார். 5 டெஸ்டுகளில் 556 ரன்களும் ஒருநாள் ஆட்டத்தில் 1490 ரன்களும் எடுத்தார். ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் எடுத்து சாதனை படைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு.