SPB Special: பாடும் நிலா பாலு நடிப்பில் நாயகனாய் உலா வந்த தருணங்கள்…..

பாடும் நிலா பாலு.. நம் செவிகளுக்கு விருந்தளித்த பாலு நம் கண்களுக்கு விருந்தளித்த தருணங்களும் பல உள்ளன. எஸ்.பி.பி பல மொழிகளில், பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த சில படங்களின் தொகுப்பை இதோ பார்க்கலாம். 

பாடும் நிலா பாலு.. நம் செவிகளுக்கு விருந்தளித்த பாலு நம் கண்களுக்கு விருந்தளித்த தருணங்களும் பல உள்ளன. எஸ்.பி.பி பல மொழிகளில், பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த சில படங்களின் தொகுப்பை இதோ பார்க்கலாம். 

1 /5

தாயை இழந்த குழந்தையை தாயாக இருந்து பார்த்துக் கொள்ளும் தந்தை வேஷம்… படம் முழுதும் எஸ்.பி.பி மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமைதியான நடிப்பால படத்தை அலங்கரித்தார் எஸ்.பி.பி என்றுதான் கூற வேண்டும். மூச்சு வாங்கித்தான் பாடினேன் என அவரே சொன்ன பின்னரும், இன்னும் மூச்சு விடாமல் பாடிய பாட்டாய் நம் மனதில் நிற்கும் ‘மண்ணில் இந்த காதலன்றி….’ பாடல் அமைந்த படமும் இதுதான். பல விதங்களில் அசத்திய இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எஸ்.பி.பி.-யின் முதிர்ந்த நடிப்பு என்றால் அது மிகையல்ல!!

2 /5

இல்லாத மனைவியைப் பற்றி புகழ்ந்து தள்ளி, இறுதியில் திருமணமே ஆகவில்லை என உண்மையைச் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் இந்த கதாபாத்திரம் அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்த ஒரு கதாபாத்திரம்.  

3 /5

முழுக்க முழுக்க இசை நிறைந்த படம் என்பதால், வெகு இயல்பாக இப்படத்தில் அசத்தி இருப்பார் எஸ்.பி.பி. இளைய கதாபாத்திரத்திலும் வயதான கதாபாத்திரத்திலும் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை படைத்தார்.

4 /5

காதலன் படத்தில், பிரபு தேவாவுக்கு ஈடு கொடுத்து அவர் ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. இதில் ஒரு தோழனைப் போன்ற தந்தையாய் அருமையாய் நடித்திருப்பார்.

5 /5

இந்த படத்தில், தன் மகன் இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து திருமண பந்தத்தில் ஈடுபட்டு வாழ வேண்டும் என தவிக்கும் தந்தையாய் நடிப்பில் அசத்திய எஸ்.பி.பி.