இந்திய தொடரில் தன்னை நக்கலடித்த சுப்மன் கில்லை அடுத்த இரண்டு பந்துகளில் அவுட்டாக்கியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இந்திய வீரர் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போட்டியில் ஆண்டர்சன் பந்துவீச்சை சூப்பராக எதிர்கொண்ட சுப்மன் கில், பவுண்டரிகளாக அடித்துக் கொண்டே இருந்தார்.
இதில் கடுப்பான ஆண்டர்சன் சுப்மன் கில்லிடம் வந்து வாக்குவாதம் செய்தார். அதாவது, இந்தியாவுக்கு வெளியில் எப்போதாவது ரன் அடித்திருக்கிறீர்களா? என கேட்டார்.
அதற்கு சுப்மன் கில், உங்களுக்கு வயதாகிவிட்டது. உடனே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் அதற்கான நேரம் வந்துவிட்டது என பதிலடி கொடுத்தார். ஆனால் அடுத்த இரண்டு பந்தில் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டானார் சுப்மன் கில்.
இதனை குறிப்பிட்டு இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், சுப்மன் கில் என்னை நக்கலடிக்கும் விதமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அதனால் இந்தியாவுக்கு வெளியே எப்போதாவது ரன் அடித்திருக்கிறீர்களா? என கேட்டேன். அதற்கு அவர் என்னை ஓய்வு பெறச் சென்னார். ஆனால், அடுத்த இரண்டு பந்தில் அவரை போல்டாக்கிவிட்டேன் என கூறியுள்ளார். மேலும், ஓய்வு பெறுவது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்றும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.