Janhvi Kapoor Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்ட சங்கீத் நிகழ்வில் நடிகை ஜான்வி கபூர் அணிந்து வந்த பிரத்யேக ஆடை பலரையும் கவர்ந்தது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் சங்கீத் நிகழ்வு (Anant Ambani - Radhika Merchant Sangeet Ceremony) மும்பையில் நடைபெற்றது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணம் நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள ஜியோ வோல்ட் கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நடைபெற உள்ளது.
ஜூலை 12ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு திருமண நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சங்கீத் நிகழ்வு ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து திருமணத்தை முன்னிட்ட கொண்டாட்டத்தால் மும்பையில் உலகின் பல பிரபலங்களும் குவிய தொடங்கி உள்ளனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருமணத்தை முன்னிட்ட கொண்டாட்டங்களில் திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்றனர்.
சங்கீத் நிகழ்வில் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் (Isha Ambani) மூன்று ஆடைகள் பலரையும் கவர்ந்திருந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த பிரத்யேக ஆடையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எப்போதுமே ஜான்வி கபூர் காஸ்ட்யூம்களில் தனித்துவம் கொண்டவர் என்றாலும், இந்த சங்கீத் நிகழ்வில் அவர் மயில் தொகை போல் தோற்றம் கொண்ட அடர் நீல நிறத்திலான அந்த ஆடை பார்ப்போரை நிச்சயம் மயங்கி விழச்செய்துவிடும்.
இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா தான் ஜான்வியின் இந்த மயில் லெஹங்கா (Peacock Lehenga) ஆடையையும் வடிவமைத்திருக்கிறார். முழுவதும் மயில் தொகை தோற்றம் கொண்ட ஸ்கர்ட் உடன் நீலமும், பச்சையும் என மயிலின் கழுத்தில் உள்ள போல் ஜான்வியின் பிளவுஸின் நிறம் இருந்தது.
இந்த உடைக்கும், திருமணமாகப்போகும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவருக்கும் தொடர்பிருக்கிறது. இவர்களின் திருமண கொண்டாட்ட நிகழ்வு முன்னதாக குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் பூர்வீக நகரம் என்பதால் ஜாம் நகரில் ஏற்பாடு செய்யப்ட்ட திருமண கொண்டாட்ட நிகழ்வில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். அதில் ஜான்வியும் பங்கேற்றார்.
இந்நிலையில், ஜாம் நகரில் மயில்கள் அதிகம் காணப்படும் என கூறிய ஜான்வி, அதனை நினைவுக்கூறும் வகையிலேயே இந்த ஆடை வடிவமைக்கக் கூறியதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.