சுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றி

Sukran Peyarchi Palangal: கலை, அழகு, பெருமை, பணம், குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் இன்று கடக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sukran Peyarchi Palangal: இன்று சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசி மாற்றத்தால் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். கடகத்தில் சுக்கிர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு செல்லச் செழிப்புகள் அதிகரிக்கும். இதனால் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்

1 /13

மேஷம்: சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் வெற்றியைத் தரும். நிம்மதியான வாழ்க்கையை கொண்டு வரும். தாயுடனான உறவில் முன்னேற்றம் காணலாம். வீட்டில் சில நல்ல செய்தி பெரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செல்லச் செழிப்புகள் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும்.

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பெரிய சாதனைகளை புரியலாம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திரைப்படம், ஊடகம் மற்றும் ஃபேஷன் உலகில் பணிபுரிபவர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும்.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனின் சஞ்சாரத்திற்குப் பிறகு, பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உடல்நிலையில் அலட்சியம் காட்ட வேண்டும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு சாதகமாக நேரம் இதுவாக அமையும்.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் காணும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பல அழகான இடங்களுக்குச் செல்லலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும்.

5 /13

சிம்மம்: சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற தாழ்வாக இருக்கும். இந்த காலகட்டத்தில், தேவையற்ற செலவுகள் கூடும். தொழிலதிபர்கள் புதிய தொழிலை தொடங்குவதை சற்று தவிர்க்க வேண்டும். திருமண வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியான பலன்களை அளிக்கும். நிதி ஆதாயங்களைப் பெறலாம். கடனில் இருந்து விடுபடலாம். பெயரும் புகழும் அதிகரிக்கும். கலை, இசையில் நாட்டம் அதிகரிக்கும்.

7 /13

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் வாழ்க்கை சலசலபபு ஏற்படலாம். அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். சில மன பிரச்சனைகள் ஏற்படலாம்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். ஆன்மீக பணிகலில் நாட்டம் அதிகரிக்கும். மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், திருமணம் நடக்கலாம்.

9 /13

தனுசு: நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நிதி சிக்கல்கள் இப்பொழுது தீரும். வீடு, மனை, வாகனம் வாங்கலாம். பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம், பண பிரச்சனையில் இருந்து விடுப்படுவீர்கள். நாள்பட்ட நோயில் இருந்து விடுப்படுவீர்கள்.

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி கஷ்டங்களை தரலாம். சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். சோம்பேறித்தனம் வரலாம். உடல்நலப் பிரச்சினை ஏற்படுத்தும். காதலர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும்.

11 /13

கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். சிறு நோய்கள் உங்களை தொந்தரவு செய்யும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்காதது. கடமையை செய்வது நல்லது. கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.

12 /13

மீனம்: சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வரும். காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். பண மழை பெய்யக்கூடும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.