Kissing VS Calories Burn:முத்தமிடுவது ஒரு கலையாக கருதப்பட்டாலும், அன்பை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான வழி. முத்தத்தில் எத்தனை வகை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் அன்பை வெளிப்படுத்தி மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்...
முத்தம் கொடுத்தால், அது உடல் எடையைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆதலால் காதல் செய்வீர்...
மேலும் படிக்க | மலைக்கா அரோராவின் அழகை கூட்டிக் காண்பிக்கும் அழகிய ஆடைகள்
இரண்டு பேர் முத்தமிடும்போது உடலில் என்ன நடக்கும்? இது ரசாயன மாற்றம் பற்றிய தகவல். இருவரும் உதட்டில் முத்தமிடும்போது சராசரியாக 9 மி.கி தண்ணீர், 0.7 மி.கி புரதம், 0.18 மி.கி ஆர்கானிக் சேர்மங்கள், 0.71 மி.கி கொழுப்பு மற்றும் 45 மி.கி சோடியம் குளோரைடு செலவாகிறது. கூடுதலாக, ஒரு நிமிடத்திற்கு சுமார் 2 முதல் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. முத்தமிட 30 வகையான தசைகள் வேலை செய்கிறதாம்!
முத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உதட்டோடு உதடு பொருத்தி, பிரெஞ்ச் முத்தம் கொடுக்கும்போது, மூளையில் இருந்து பல இரசாயனங்கள் வெளியாகின்றன, இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது பதற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்
முத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருமாம்! இளமையில், உதடுகளில் தொடர்ந்து முத்தமிடுவது, காதல் மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துமாம்...
ஒருவரைத் தொடுவது ஏன் விசேஷமானது? நாம் ஒருவரைத் தொடும்போது, உணர்வுகள் பரிமாறப்படுகின்றன. உதடுகளால் ஒருவரைத் தொடும்போது, அதில் ஒரு தனித்துவமான உணர்வு பரிமாறப்படுகிறது. ஏனெனில் உதடுகள் மிகவும் அதிகமான உணர்திறன் கொண்டவை.
உதடுகளின் நுனியில் நரம்பு செல்கள் உள்ளன. பிறப்புறுப்பைத் தவிர, உதடுகளின் நுனியிலும் நரம்பு செல்கள் உள்ளன. உடலின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவு நரம்பு செல்கள் கிடையாது. உதடுகளில் இருக்கும் சுரப்பிகள், முத்தமிடும்போது தனித்துவமான வாசனையை உருவாக்குகின்றன.