How To Check the EPF balance: வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்வது நிதி திட்டமிடல் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு அவசியம்.
உங்களிடம் PF கணக்கு, UAN எண் இருக்கும் நிலையில், EPFO இணையதளத்திற்கு சென்று எளிதாக கண்டறியலாம். ஆனால் UAN எண் தெரியவில்லை என்றால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கலாம். UAN எண் தெரியவில்லை என்றால், உங்கள் கணக்கில் உள்ள வருங்கால வைப்பு நிதி இருப்பு என்ன என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அல்லது EPF ஊழியர்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. EPF கணக்குகளில், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12% பங்களிப்பார்கள். மேலும் அதற்கு சமமான தொகையை பணியில் அமர்த்தியுள்ள முதலாளிகள் அல்லது நிறுவனம் பங்களிக்கப்படுகிறது.
EPF இருப்பைச் சரிபார்க்க, சந்தாதாரர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். UAN என்பது ஒரு ஊழியரின் மாத சம்பள சீட்டில் குறிப்பிடப்பட்ட அடையாள எண் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களிடம் PF கணக்கு, UAN எண் இருக்கும் நிலையில், EPFO இணையதளத்திற்கு சென்று எளிதாக கண்டறியலாம். ஆனால் UAN எண் தெரியவில்லை என்றால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கலாம்.
UAN எண் இல்லாமல், நீங்கள் பெறும் சம்பளத்தில் எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. உங்கள் கணக்கில் உள்ள வருங்கால வைப்பு நிதி இருப்பு என்ன என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
முதலில் உங்கள் PF கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். மிஸ்ட் கால் எண்ணுக்கு கால் செய்தால் 2 ரிங் அடித்த பின்னர் உடனேயே அழைப்பு துண்டிக்கப்பட்டு, உடனேயே பிஎப் கணக்கு தகவல் கிடைக்கும்.
மிஸ் கால் கொடுத்த பின் EPFO-லிருந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு SMS செய்தி வரும். அதில், கணக்கு விவரங்கள் மற்றும் இருப்பு விவரங்கள் இருக்கும்.
தொலைபேசி அழைப்பின் மூலம் மட்டுமின்றி எஸ் எம் எஸ் மூலமாகவும் இருப்புத் தொகையை அறியலாம். 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், பிஎஃப் கணக்கு தகவல்கள் கிடைக்கும். செய்தியில், "EPFOHO UAN" என டைப் செய்யவும்.
எனினும், இதன் மூலம் அறிய உங்கள் மொபைல் எண்ணை PF போர்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மொபைல் எண், UAN எண்ணுடன் இணைக்கப்படும். அதுமட்டுமின்றி, KYC நடைமுறையை பூர்த்தி செய்வதும் அவசியம்.