டீயுடன் பஜ்ஜி, முட்டை போண்டா சாப்பிடும் வழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்கு தான்..!!

பெரும்பாலானோர்  டீ குடிக்கும் போது, அதனுடன் ஏதாவது ஒரு ஸ்கேக்ஸ் சாப்பிட  விரும்புவார்கள். ஆனால் டீயுடன் சிலவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று இந்த செய்தியில் டீயுடன் சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி ஆரிந்து கொள்ளலாம்.

1 /5

பெரும்பாலான மக்களுக்கு பொரித்த உணவுகளை டீயுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். அதுவும் பஜ்ஜி, முட்டை போண்டா பக்கோடா போன்ற பொருட்களை ருசிக்க பிடிக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. தேநீருடன் கடலை மாவில் தயாரிக்கப்பட்ட சாப்பிடுவதால் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு செரிமான பிரச்சனைகளும் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

2 /5

தேநீருடன் பச்சை உணவுகள், சமைக்காத உணவுகள் சாப்பிடுவது சரியல்ல. தேநீருடன் அவற்றை எடுத்துக்கொள்வது உடல்நலம் மற்றும் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். சாலடுகள், முளைத்த தானியங்கள் அல்லது பச்சைப் பழங்களை டீயுடன் சாப்பிடக் கூடாது.

3 /5

மஞ்சள் அளவு அதிகமாக உள்ள உணவு பொருளையும் தவிர்க்க வேண்டும். தேயிலை மற்றும் மஞ்சளில் உள்ள வேதியியல் கூறுகள் ஒன்றோடொன்று வினை புரிந்து, வயிற்றில் இரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தி, செரிமான அமைப்புக்கு சேதம் விளைவிக்கும். வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், இதனை தவிர்க்க வேண்டும். 

4 /5

முட்டை புரதத் சத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் தேநீருடன் மறந்தும் கூட, வேகவைத்த முட்டைகளை உட்கொள்ளக்கூடாது. தேநீருடன் முட்டைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது.

5 /5

டீயில் எலுமிச்சையை பிழிந்து பால் இல்லாத பிளாக் லெமன் டீ குடிப்பார்கள். ஆனால் இந்த டீ அசிடிட்டி மற்றும் செரிமானம் மற்றும் வாயு பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் தான் லெமன் டீயை அருந்துவதோ, அல்லது எலுமிச்சை சாறு, பிற புளிப்பு  உள்ள பொருட்களை டீயுடன் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.