விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி

பூமியில், நமக்கு விளங்காத மர்மங்களை கொண்டிருக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான்  டானாகில் டிப்ரஷன் (Danakil Depression) என்ற இடம். இது வட ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா என்ற நாட்டில் அமைந்துள்ளது. இங்கு பல சூடான நீரூற்றுகள் உள்ளன, எரிமலைகளும்  உள்ளன. அதோடு மட்டுமல்ல இங்கு நெருப்பு மழையும் பெய்யுமாம்.

பூமியில், நமக்கு விளங்காத மர்மங்களை கொண்டிருக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான்  டானாகில் டிப்ரஷன் (Danakil Depression) என்ற இடம். இது வட ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா என்ற நாட்டில் அமைந்துள்ளது. இங்கு பல சூடான நீரூற்றுகள் உள்ளன, எரிமலைகளும்  உள்ளன. அதோடு மட்டுமல்ல இங்கு நெருப்பு மழையும் பெய்யுமாம்.

 

1 /5

டானாகில் டிப்ரஷன் என்ற இடத்தில் அதிக அளவு பொட்டாசியம் உப்பு மற்றும் கந்தகத்தை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள நிலம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறமாக மாறியுள்ளது. அதோடு மட்டுமல்ல, இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், டானாகில் டிப்ரஷன் கடல் மட்டத்திலிருந்து 125 மீட்டர் கீழே அமைந்துள்ளது 

2 /5

இந்த இடத்தில் மூன்று டெக்டோனிக் ப்ளேட்டுகள் உள்ளன. டெக்டோனிக் இயக்கம் காரணமாக, இந்த தட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 1 அல்லது 2 சென்டிமீட்டர் தொலைவில் நகர்கின்றன. தட்டுகள் விலகுவதால் இங்கு விரிசல் வருகிறது. இதன் காரணமாக, பூமியின் உள்ளே இருந்து சூடான எரிமலை வெடிக்கிறது. சிறிது நேரம் கழித்து ஆழமான பள்ளம் தோன்றி, அதில் கடல் நீரை முழுமையாக நிரம்பி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3 /5

இங்கு ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர். டானாகில் டிப்ரஷன் பகுதியில் பொதுவாக வெப்பநிலை 45 ° C  என்ற அளவில் இருக்கும்.  ஆனால், பல சமயங்களில் 55 டிகிரியை எட்டும். அதே நேரத்தில், எரிமலை வெடிக்கும் நேரத்தில், இங்குள்ள வெப்பநிலை 125 ° C ஐ அடைகிறது. 

4 /5

இங்கு எப்போதும் வெப்பமான சூழ்நிலை விஞ்ஞானிகளுக்கு மற்ற கிரகங்கள் மற்றும் சந்திரனில், வாழ்க்கையின் தோற்றம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை ஆராய்ந்து அறிய உதவும். எத்தியோப்பியாவில் அஃபர் முக்கோணத்தின் வடக்கு பகுதியில் டானாகில் டிப்ரஷன் அமைந்துள்ளது

5 /5

இந்த காரணத்திற்காக, இந்த இடம் கேட்வே ஆஃப் ஹெல், அதாவது நரகத்தின் நுழைவாயில்  என்றும் அழைக்கப்படுகிறது

Next Gallery