இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்துள்ள இந்த நேரத்தில், கொரோனா பாதிப்பினால், வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டவர்கள், வீட்டிலேயே, தங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை சரியாக பரிமாரிக்க சில வழிமுறைகளை பின்பற்ற மத்திய சுகாதார அமைச்சகம் (Union Ministry of Health) அறிவுறுத்தியுள்ளது.
Proning, என்பது மருத்துவ மொழியில் கூற வேண்டும் என்றால், பாதுகாப்பான நிலையில் குப்புற படுத்துக் கொள்ளுதல் என்பதாகும். மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ள இந்த முறையில், சுவாசம் மேம்படுவதோடு, ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கிறது. வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கொரோனா நோயாளிக்கு ப்ரோனிங் (Proning) மிகவும் உதவியாக இருக்கும்.
கொரோனா நோயாளிக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும் போது, ஆக்ஸிஜன் அளவு (SpO2) 94 என்ற அளவிலிருந்து குறைகிறது. Proning செயல்முறை செயல்முறைக்கு, முதலில் கழுத்தின் கீழ் ஒரு தலையணையை வைக்கவும். பின்னர் ஒன்று அல்லது இரண்டு தலையணைகளை மார்பின் கீழ் படத்தில் காட்டியுள்ளதை போல்வைக்கவும், இரண்டு தலையணைகள் பாதத்தின் கீழ் வைக்கவும்.
நீங்கள் வீட்டில் தனிமைபடுத்தலில் இருந்தால், உங்கள் ஆக்ஸிஜன் அளவை (SpO2) அவ்வப்போது சரிபார்க்கவும். இது தவிர, காய்ச்சல், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை ஆகியவற்றை அவ்வப்போது அளவிட வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், பலரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான உதவியாக இருக்கும்.
மற்றவர்கள் உதவி இல்லாமல் நீங்களே Proning செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு நான்கு-ஐந்து தலையணைகள் தேவைப்படும். மேலே படத்தில் காட்டயுள்ளதை போன்ற நிலைகளில், 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து, இந்த செயல்முறையைப் பின்பற்றுங்கள்.
மகர்ப்பமாக இருப்பவர்கள், இருதயம் தொடர்பான நோய் உள்ளனவர்கள், முதுகெலும்பு பிரச்சினைகள் அல்லது உடலில் எலும்பு முறிவுகள் இருந்தால் இந்த செயல்முறையை பின்பற்ற வேண்டாம். இது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.